இந்தியை பற்றி பேசும் திமுகவினர்… தாங்கள் நடத்தும் பள்ளிகளில் இந்தியை நீக்குவார்களா..? முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி கேள்வி…

Author: Babu Lakshmanan
13 October 2022, 5:01 pm
Quick Share

கோவை : தாங்கள் நடத்தி வரும் பள்ளிகளில் இருந்து இந்தி மொழியை நீக்குவார்களா..? என்று திமுகவினருககு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை அதிமுக மாவட்ட அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. அதிமுகவின் 51வது ஆண்டுவிழாவை கொண்டாடுவது குறித்து நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் 300க்கும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

admk sp velumani - updatenews360

இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எஸ்பி வேலுமணி கூறியதாவது :- ஒவ்வொரு குடும்பத்திலும் அதிமுக கொண்டு வந்த திட்டங்கள் இருக்கின்றது. திமுக முதல்வர் ஸ்டாலின் எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. கோவையில் 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை அதிமுக கொடுத்தது. இப்போது கோவையில் எந்த சாலையிலும் மக்கள் செல்ல முடியாத நிலையில் இருக்கின்றது. மாநகராட்சி, நெடுஞ்சாலைகள் மோசமாக இருக்கின்றது.

இந்த ஆட்சிமாற வேண்டும். இந்த ஆட்சியை வீட்டிற்கு அனுப்பவும் மக்கள் முடிவு செய்து விட்டனர். நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெல்லும். எடப்பாடியாரே முதல்வராக இருக்கலாம் என மக்கள் நினைக்கின்றனர். இங்கே எப்போதும் இரு மொழி கொள்கைதான். தமிழகத்தில் இந்தி விவகாரத்தில் எந்த பிரச்சினையும் இல்லை என பா.ஜ.க தலைவர் தெளிவுபடுத்தியுள்ளார். பா.ஜ.க தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி இருக்கின்றது.

admk sp velumani - updatenews360

திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தியை எடுக்க சொல்ல வேண்டும். நாளைக்கு கோவை வரும் மத்திய விவசாயத்துறை அமைச்சரை சந்தித்து உரம், கொப்பரை தேங்காய் விவகாரம் குறித்து மனு அளிக்கப்படும். தமிழகத்தின் 39 எம்.பி.க்கள் எதுவுமே செய்வது இல்லை.

காவிரி பிரச்சினைக்காக நாடாளுமன்ற அதிமுக எம்.பி.க்கள் முடக்கினர். இப்ப இருக்கின்ற எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் சீட்டை தேய்த்துவிட்டு வருகின்றனர். யாரையும் கட்டுப்படுத்த முடியாத முதல்வராக ஸ்டாலின் இருக்கின்றார். முதல்வருக்கு கட்டுப்படாதவர்களாக அந்த கட்சியினரும் இருக்கின்றனர், என எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

Views: - 407

0

0