இது இந்தி அரசல்ல, இந்திய அரசு என்பதை மறந்து விடாதீர் : கமல்ஹாசன் காட்டம்..!

22 August 2020, 1:55 pm
Kamal Cover
Quick Share

மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் ஆலோசனைக் கூட்டத்தின் போது, இந்தி மொழி தெரியாததால் தமிழக மருத்துவர் அவமதிப்பு செய்யப்பட்டதற்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்தவும், தடுக்கவும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. காணொளி காட்சியின் மூலம் நடத்தப்பட்ட இந்த ஆலோசனையில், அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த மருத்துவர்களும் கலந்து கொண்டனர்.

அப்போது, மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் சார்பில் கலந்து கொண்டவர்கள் இந்தியில் பேசியதாகவும், இந்தி தங்களுக்கு தெரியாததால், பொது மொழியான ஆங்கிலத்தில் பேசும்படி தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் கூறியதாகக் கூறப்படுகிறது. இதனை கேட்ட மருத்துவர்கள், இந்தி தெரியாதவர்கள் இந்த ஆலோசனையில் இருந்து வெளியேறுமாறு தெரிவித்ததாக தகவல் வெளியாகியது.

.இதுகுறித்த வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி உள்ள நிலையில், ஆயுஷ் அமைச்சகத்தின் செயல்பாட்டிற்கு தமிழகத்தில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில், இந்தி மொழி திணிப்பதாகக் கூறி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:- ஆயுஷ் அமைச்சக அதிகாரிகள் தமிழ் புரியாமல் எப்படி எங்கள் மருத்துவத்தைப் புரிந்து கொள்வர் என்ற கேள்வி எழுப்பாதது எம் மருத்துவர்களின் பெருந்தன்மை. அனைவருக்கும் புரியும் மொழியில் இயங்கவேண்டியது அரசின் கடமை.இது இந்தி அரசல்ல.இந்திய அரசு என்பதை மறந்துவிட வேண்டாம்.வாழிய பாரத மணித்திருநாடு என பதிவிட்டுள்ளார்.

Views: - 31

0

0