இராமகோபாலன் மறைவிற்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் : அமைச்சர் உள்ளிட்டோரும் அஞ்சலி..!

30 September 2020, 7:40 pm
ramagopalan1 - updatenews360
Quick Share

சென்னை : இந்து முன்னணி நிறுவனர் இராமகோபாலனின் மறைவிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “இந்து முன்னணியின்‌ நிறுவனத்‌ தலைவர்‌ திரு. இராம. கோபாலன்‌ அவர்கள்‌ உடல்‌ நலக்குறைவால்‌ தனியார்‌ மருத்துவமனையில்‌ அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று (30.9.2020) இயற்கை எய்தினார்‌ என்ற செய்தியை அறிந்து மிகுந்த வருத்தம்‌ அடைந்தேன்‌. திரு. இராம. கோபாலன்‌ அவர்கள்‌ சுதந்திரப்‌ போராட்டங்களில்‌ ஈடுபட்டதோடு, இந்து முன்னணி இயக்கத்திற்கு வழிகாட்டியாகவும்‌ திகழ்ந்தார்‌.

திரு. இராம. கோபாலன்‌ அவர்களை இழந்து வாடும்‌, அவரது இயக்கதொண்டர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும்‌, அனுதாபத்தையும்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. திரு. இராம. கோபாலன்‌ அவர்களின்‌ ஆன்மா இறைவனின்‌ திருவடி
நிழலில்‌ இளைப்பாற எல்லாம்‌ வல்ல இறைவனைப்‌ பிரார்த்திக்கிறேன்‌,” எனத் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணியும் இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.

இதேபோல, கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்தும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழக எதிர்கட்சி தலைவரும், திமுக தலைவருமான ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

Views: - 1

0

0