கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் காலமானார்!!

30 September 2020, 5:06 pm
ramagopalan - updatenews360
Quick Share

சென்னை : கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வந்த இந்து முன்னணி அமைப்பின் நிறுவனர் ராமகோபாலன் இன்று காலமானார்.

கடந்த 26ம் தேதி மூச்சுத் திணறல் காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ராமகோபாலன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேலும், அவருக்கு கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. அதில், ராமகோபாலனுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது

இதையடுத்து, கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 94. ராமகோபாலனின் மறைவிற்கு பல்வேறு இந்து அமைப்பினர் மற்றும் அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.