சிவனடியார் சரவணன் தற்கொலை..! துணை ஆய்வாளர் அந்தோணி மைக்கேலின் மிருகத்தனமான தாக்குதலால் விரக்தி..!

23 August 2020, 5:40 pm
Sadhu_Saravanan_UpdateNews360
Quick Share

42 வயதான சிவனடியார் சரவணன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் கிராமத்திற்கு அருகே, தமிழக காவல்துறையின் துணை ஆய்வாளர் அந்தோணி மைக்கேல் தலைமையிலான குழுவால் அவமானம் மற்றும் சித்திரவதைக்கு ஆளான நிலையில், மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் சங்ககிரி தாலுகாவில் உள்ள குண்டங்கல் காடு என்ற இடத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. சிவனடியார் சரவணன் தனது பக்தர்களுக்காக அமாவாசை நாட்களில் சிறப்பு பூஜைகள் செய்து வந்தார். பக்தர்களின் பிணிகளைத் தீர்க்க எடப்பாடிக்கு அருகிலுள்ள புளியம்பட்டி குடலம்காடு கிராமத்தில் அமைந்துள்ள அவரது ஆசிரமம் அமைத்து செயல்பட்டு வந்துள்ளார்.

சரவணன் தனது வீட்டில் உட்கார்ந்து தன்னிடம் வரும் பக்தர்களுக்காக பூஜை செய்வதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஆகஸ்ட் 14’ஆம் தேதி, பேய் பிடித்ததாக கூறப்பட்ட இரண்டு பெண்கள் சாமியாரிடம் வந்தனர். சுவாரஸ்யமாக, அதே நேரத்தில் தேவூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல்துறையினரும் அவரது இடத்திற்கு வந்து அவரை அடித்து உதைத்தனர்.

துணை ஆய்வாளர் அந்தோணி மைக்கேல் சிவனடியாரை கொடூரமாக அடித்தார் :

துணை ஆய்வாளர் அந்தோனி மைக்கேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று துஷ்பிரயோகம் செய்த பின்னர் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. ஒரு பெண் பக்தர் கொடுத்த உணவுப் பொட்டலத்தை சிவனடியார் சாப்பிடும்போது காவல்துறையினர் அவரை அடித்து உதைத்ததாக சிலர் கூறினர்.

அவர் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, மறுநாள் காலையில் சிவனடியார் சரவணன் காணாமல் போனார். உள்ளூர் மக்களும் அவரது நண்பர்களும் அடுத்த நாள் அவரைத் தேடத் தொடங்கியபோது, ​​அவரது நண்பர்கள் வாட்ஸ்அப்பில் அவரது வீடியோ வந்தது. அதில் போலீஸ் அடித்தது தனக்கு மன அழுத்தத்தை உண்டாக்கியுள்ளது என்று கூறினார்.

பின்னர், ஆகஸ்ட் 15’ஆம் தேதி அவரது சிதைந்த உடல், அவரின் இல்லத்தை ஒட்டிய வனப்பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது மற்றும் போலீசார் உடலுக்கு அருகில் ஒரு மொபைலைக் கண்டுபிடித்தனர். “சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி மைக்கேல் தனக்கு கிடைத்த சக்தியால் எதையும் செய்ய முடியும் என்று நினைத்து என்னை அடித்தார்” என்று சிவனடியார் வீடியோவில் குற்றம் சாட்டினார்.

போலீஸ் மிருகத்தனம் மரணத்திற்கு வழிவகுத்ததாக குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்
சிவனடியாரின் மரணத்திற்குப் பிறகு, காவல்துறை அதிகாரிகள் இந்த வழக்கை இயற்கைக்கு மாறான மரண வழக்கு என்று பதிவு செய்துள்ளனர். காவல்துறை துணை ஆய்வாளரை பாதுகாக்க முயல்வதால் விசாரணையின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளன என கிராம வாசிகள் எண்ணுகின்றனர்.

இதற்கிடையில், பாதிக்கப்பட்ட சரவணனின் மகனும் மகளும், துணை ஆய்வாளர் அந்தோணி மைக்கேல் தங்கள் தந்தையை கொடூரமாக தாக்கியதாக கூறினர். “அப்பா தனது குடும்பத்தினருக்கு முன்னால் தாக்கப்பட்டதில் வருத்தப்பட்டார். எங்களுடன் பேசவில்லை. சனிக்கிழமை காலை வீட்டை விட்டு வெளியேறினார். இறுதியாக அவரது உடல் ஒரு வனப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.” என்று அவர் நிகழ்வுகளை நினைவு கூர்ந்தார்.

சரவணனுக்கு அவரது மனைவி, ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். எஸ்.ஐ.அந்தோனி மீது நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் சமூக ஊடக பயனர்கள் சிவனடியாரின் மரணத்திற்கு நீதி கோரியுள்ளனர்.

இதற்கிடையில், சிவனடியார் சரவணனுக்கு நீதி கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துவதாக இந்து மக்கள் கட்சி போன்ற இந்து குழுக்கள் தெரிவித்துள்ளன.

Views: - 52

0

0