நேரடி தேர்தலை நடத்துங்கள் : திமுகவுக்கு மார்க்சிஸ்ட் ‘செக்’!!

Author: Udayachandran RadhaKrishnan
27 November 2021, 1:30 pm
Communist Condemned DMK -Updatenews360
Quick Share

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மெல்ல மெல்ல திமுகவுக்கு நெருக்கடி கொடுக்க தொடங்கியிருக்கின்றன. இரண்டு மாதங்களுக்கு முன்பு, சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள மோரூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடியை ஏற்ற விடாமல் தடுத்ததாக போலீசார் மீது திருமாவளவன் ஒரு குற்றச்சாட்டை வைத்தார்.

திருவாரூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சாலை மறியல் - Tamil Today  News

திமுகவுக்கு நெருக்கடி கொடுத்த விசிக

அந்த சம்பவத்தின்போது போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் போலீசார் தடியடி நடத்தியதில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து திருமாவளவன் மாநிலம் முழுவதும், போலீசாரை கண்டித்து போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தார். ஆளும் கட்சிக்கு எதிராக அதன் கூட்டணி கட்சியே போர்க்கொடி உயர்த்தியதால் அப்போது அரசியலில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து திருமாவளவன் பேசிய பின்பு போராட்டம் கைவிடப்பட்டது.

வெற்றிக் களிப்புடன் சென்ற திருமா! வெறும் கையை கொடுத்து அனுப்பிய ஸ்டாலின்!

ஜோதிமணி அளித்த பரபரப்பு புகார்

இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வாங்குவதில் முறைகேடு நடப்பதாக கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் மீது கரூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் எம்பி ஜோதிமணி பகிரங்கமாக குற்றம் சாட்டினார். அதுமட்டுமின்றி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இரண்டு நாள் உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டு தமிழக அரசியல் களத்தை பரபரப்பாக்கினார்.

TN: Karur MP Jothimani stages protest for second day seeking camps for  disabled

மேலும் மாநில தலைமைச் செயலாளர் இறையன்புவுக்கு அவர் ஒரு கடிதமும் எழுதினார். அதில் மாவட்ட ஆட்சியர் எந்த ஒரு திட்டபணிக்கும் 1 முதல் 2 சதவீத கமிஷன் பெறுகிறார். அவர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

Tamil Nadu: Karur MP Jothimani stages dharna at Collectorate demanding  ALIMCO camp for disabled- The New Indian Express

மாவட்ட நிர்வாகம் சார்பில் சில உத்தரவாதங்கள் அளிக்கப்பட்ட பின்பு, தனது போராட்டத்தை ஜோதிமணி கைவிட்டு விட்டாலும் கூட அவர் வைத்த குற்றச்சாட்டின் வீரியம் இன்னும் தணியவில்லை.

திமுகவுக்கு செக் வைக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

இந்த நிலையில்தான் தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டம் தலைமைக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன்,
ஆகியோர் தலைமையில் சென்னையில் நடந்தது.

Tamil Nadu State Conference photos | Communist Party of India (Marxist)

இக்கூட்டத்தில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்த குடும்பங்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாயும், பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாயும்
வழங்க வேண்டும், நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், என்பது உள்பட பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழர்களைப் புறக்கணிக்கும் என்.எல்.சி. பணி நியமனத்திற்கு கே.பாலகிருஷ்ணன்  கண்டனம்! | nakkheeran

மூன்று முக்கிய தீர்மானங்கள்

எனினும் மூன்றாவதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம்தான், திமுகவுக்கு அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. அது திருமா அவ்வப்போது கூறும் தோழமையின் சுட்டுதல் போல் இல்லாமல், ஜோதிமணி எம்பி வைத்த ஊழல் குற்றச்சாட்டு போல இருப்பதுதான் திமுகவின் அதிர்ச்சிக்கு காரணம்.

அந்த தீர்மானத்தில் தமிழகத்தில் நீண்டகாலமாக நகர்ப்புற உள்ளாட்சித் தலைவர்களை மக்களே நேரடியாகத் தேர்வுசெய்யும் தேர்தலாக இருந்துவந்தது. அது கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் நேரடித் தேர்தலாக அல்லாமல் கவுன்சிலர்கள் வாக்களித்து தேர்வுசெய்யும் மறைமுகத் தேர்தலாக நடத்தும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது.

அப்போ எதிர்ப்பு, இப்போ ஆதரவு

இதில் ஜனநாயக முறைகேடுகளும் ஊழல்களும் நடைபெற வாய்ப்பு இருப்பதால் மீண்டும் நேரடி முறையிலேயே தலைவர் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்று அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுகவும் மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும் வலியுறுத்தின.

DMK finalises constituencies for MDMK, IUML and three other allies | The  News Minute

ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதன் முந்தைய நிலைப்பாட்டுக்கு மாறாக, ”நகர்ப்புற உள்ளாட்சி தலைவர்களுக்கான தேர்தலை நேரடித் தேர்தலாக நடத்தும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவராமல் மறைமுகத் தேர்தலாக நடத்த இருப்பதாக தெரிகிறது.

மறைமுக தேர்தலுக்கு மார்க்சிஸ்ட் எதிர்ப்பு

இதனால் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடப்பதற்கும், ஜனநாயகதுக்கு விரோதமான முறையில் ஆள்கடத்தல் மற்றும் பல லட்சம் ரூபாய் பேரம் நடப்பதற்கும் வாய்ப்பு உள்ளது. இது மக்களினுடைய உண்மையான தேர்வாக அமையாது. ஜனநாயக மீறல்கள் நடப்பதற்கு வழிவகுக்கும். ஜனநாயக முறையில் முறைகேடுகள் இல்லாதபடி தலைவர் தேர்தல் நடைபெற வேண்டும். அதற்கு தகுந்த வகையில் தேவையான சட்டத்திருத்தத்தை தமிழக அரசு அவசரச் சட்டமாகப் பிறப்பித்து நகர்ப்புற உள்ளாட்சி தலைவர் தேர்தலை நடத்த முன்வர வேண்டும்”
என்று கூறப்பட்டிருக்கிறது.

CPM joins DMK-led front in Tamil Nadu for Lok Sabha polls

அதாவது, நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு மறைமுக தலைவர் தேர்தல் நடந்தால் தங்களுக்கு பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்காது என்பதால் இந்த கோரிக்கையை தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வைத்திருப்பது தெரிகிறது.

அரசியல் விமர்சகர்கள் கருத்து

இதுகுறித்து அரசியல் ஆர்வலர்கள் கூறும்போது, “கடந்த சில தேர்தல்களைப் போல் தற்போது கூட்டணிக் கட்சிகளை திமுக தலைமை அழைத்துப் பேசவில்லை என்ற மனக் குமுறல், அதிருப்தி காங்கிரஸ், விசிக இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, முஸ்லிம்லீக் கட்சிகளிடையே காணப்படுகிறது.

நேரடித் தேர்தல் நடந்தால் குறிப்பிட்ட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளை கூட்டணிக் கட்சிகளால் வாதாடிப் பெற்று, போட்டியிட முடியும். மக்களால் நேரடியாகத் தேர்வு செய்யப்படுவதால் தலைவர் பதவிக்கும் மரியாதை கிடைக்கும். அதன் மூலம் தங்களது கட்சிகளின் செல்வாக்கையும் வளர்த்துக் கொள்ளலாம் என்று திமுக கூட்டணி கட்சிகள் கருதி இருந்தன.

கூட்டணி கட்சிகளுக்கு அல்வா கொடுக்கும் திமுக?

ஆனால் மறைமுகமாக தலைவர் தேர்தல் நடத்தப்பட்டால், பெரும்பான்மை வார்டுகளில் போட்டியிடக்கூடிய நெருக்கடி சூழல் உருவாகும். ஆனால் அதற்கேற்ப கூட்டணி கட்சிகளுக்கு அதிக எண்ணிக்கையில் வார்டுகளை திமுக ஒதுக்குமா? என்பது கேள்விக்குறிதான்.

Tamil Nadu Polls 2021: DMK gives 25 Assembly seats, Kanyakumari Lok Sabha  seat to Congress | Elections News – India TV

மதுரை மாநகராட்சியில் தங்களுக்கு பெரும் செல்வாக்கு உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கருதுகிறது. இதேபோல் நெல்லையில் தங்களுக்கு பலம் இருப்பதாக காங்கிரஸ் நினைக்கிறது.

அதனால் நேரடித் தேர்தல் நடத்தப்பட்டால் சட்டப்பேரவை நாடாளுமன்றத் தேர்தல் போல குறிப்பிட்ட இடங்களை கேட்டு பெற்றுவிட முடியும். ஆனால் மறைமுக தலைவர் தேர்தல் என்றால் வார்டு உறுப்பினர்கள் அதிக அளவில் வெற்றி பெற்றிருக்கவேண்டும். இதை திமுகவின் மாவட்ட செயலாளர்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்று திமுகவின் கூட்டணி கட்சிகள் அஞ்சுகின்றன.

மறைமுக தேர்தல் கூட்டணிகளுக்கு பாதகம்

ஒரு மாநகராட்சியில் தேர்தல் முடிவுகள் இழுபறியாக வந்தால் அங்கு பெருமளவில் பேரம் நடக்கும், பணமும் புகுந்து விளையாடும், வார்டு உறுப்பினர்கள் கடத்தப்பட்டு சொகுசு விடுதிகளில் தங்க வைக்கப்படுவது போன்ற சித்து விளையாட்டுகளும் அரங்கேறும் என்று மார்க்சிஸ்ட் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகள் பயப்படுகின்றன. இதனால் தங்களுக்கு மறைமுக தேர்தல் மூலம் எந்த பலனும் கிடைக்காது என்பதையும் அவை உணர்ந்துள்ளன. எனவேதான் மார்க்சிஸ்ட் நேரடியாக தற்போது போர்க்கொடி உயர்த்தி உள்ளது. உடனடியாக சட்ட விதிகளில் திருத்தம் செய்து நேரடித் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.

CPI gets 6 seats in DMK alliance for Tamil Nadu

ஆனால் தேர்தல் நடத்துவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் மாநில தேர்தல் ஆணையம் கிட்டத்தட்ட முடித்து விட்ட நிலையில் நேரடித் தேர்தலுக்கான வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது. எனினும் முதலமைச்சர் ஸ்டாலின் தங்களை அழைத்து சமாதானப்படுத்துவார்
என்றும் திமுக கூட்டணி கட்சிகள் காத்திருக்கின்றன” என்று அந்த அரசியல் ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Views: - 258

0

0