தொடரும் கனமழை…எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: முழு விவரம் இதோ..!!

Author: Aarthi Sivakumar
30 November 2021, 8:56 am
Quick Share

சென்னை: தொடர் கனமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது. இது நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

குமரி கடல் பகுதியில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் பல மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் கனமழை காரணமாக தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கனமழை எதிரொலியால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தேனி, கடலூர், ராமநாதபுரம், நீலகிரி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் திருவள்ளூர், தூத்துக்குடி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 195

0

0