வேகமாக நிரம்பும் இடுக்கி அணை : எர்ணாகுளத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!!

13 October 2020, 1:26 pm
idukki dam 1- updatenews360
Quick Share

கேரளா : கேரளாவில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, மிகபெரிய அணையான இடுக்கி அணை நிரம்ப உள்ளது. இதனால், எர்ணாகுளத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, எர்ணாகுளம், கோட்டயம், ஆலப்புழா, இடுக்கி, திருச்சூர், மலப்புரம், வயநாடு, கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக, கேரளாவின் பெரும்பாலான பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால், அங்குள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

அந்த வகையில், கேரளாவின் மிகப்பெரிய அணையான இடுக்கி, தற்போது மொத்த கொள்ளளவை எட்டவுள்ளது. அணையின் மொத்த நீர்மட்டமான 2,403 அடியில் தற்போது 2,391 அடி நிரம்பியது. 2,399 அடியும் எட்டும் போது, அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இடுக்கி அணை முழு கொள்ளளவை எட்டவுள்ளதால், எர்ணாகுளத்திற்கு நீல எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Views: - 45

0

0