நிலச்சரிவில் சிக்கியவர்களை விரைவில் மீட்டு மருத்துவ சிகிச்சை கொடுங்க : கேரள அரசுக்கு முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை..!

7 August 2020, 7:55 pm
EPS_UpdateNews360
Quick Share

சென்னை : கேரள மாநிலம் இடுக்கியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியிருப்பவர்களை விரைவில் மீட்டு, அவர்களுக்கான உரிய சிகிச்சைகளை உடனடியாக வழங்க வேண்டும் என கேரள அரசுக்கு முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இடுக்கி, மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்கள் தற்போது வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இவ்வளவு பாதிப்புகள் ஏற்படுத்தியுள்ள இந்த மழை, ஆக.,10ம் தேதி வரை நீட்டிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இடுக்கி மாவட்டம் ராஜமலையில் தொடர் கனமழையினால், பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில், 17 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். மேலும், 80 பேர் மாயமாகி உள்ள நிலையில், அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு பகுதியில் இன்று (07.08.2020) அதிகாலை தேயிலை தோட்டப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை விரைந்து மீட்டெடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டுமாய் மாண்புமிகு கேரளா முதலமைச்சர் @CMOKerala அவர்களை கேட்டுக் கொள்கிறேன்,” எனத் தெரிவித்துள்ளார்.

Views: - 9

0

0