பஞ்சுக்கான 1% சந்தை நுழைவு வரி ரத்து : முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு

Author: Babu Lakshmanan
4 September 2021, 10:46 am
Cm stalin - cotton - updatenews360
Quick Share

சென்னை : வெளிமாநிலங்களில் இறக்குமதி செய்யப்படும் பஞ்சுக்கான 1% சந்தை நுழைவு வரி ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை இன்று கூடியதும் விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், தொழில் முனைவோர் மற்றும் நெசவாளர்களின் கோரிக்கையை ஏற்று வெளி மாநிலம் அல்லது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பஞ்சு மீதான 1% நுழைவு வரி ரத்து செய்யப்படுவதாகவும், நெசவு தொழிலை நம்பியிருக்கும் தொழிலாளர்களைக் கருத்தில் கொண்டு நுழைவு வரி ரத்து முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும், பஞ்சுக்கான நுழைவு வரி ரத்துக்கான மசோதா இந்த சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே கொண்டு வரப்படும் என்றும் அவர் கூறினார்.

Views: - 269

0

0