தமிழகத்தில் இடைத்தேர்தலா..!!! ‘வாய்ப்பில்லை ராஜா’ : இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
29 September 2020, 2:09 pmசென்னை : தமிழகத்தில் காலியாக உள்ள 3 தொகுகளுக்கு தற்போதைக்கு இடைத்தேர்தல் நடத்த முடியாது என இந்திய தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் தேர்தல்கள் திட்டமிட்டபடி, உரிய பாதுகாப்பு முறைகளுடன் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படியே, அண்மையில் பீகார் சட்டப்பேரவைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என, தேர்தல் தேதியை வெளியிட்டார் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா.
இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் காலியாக உள்ள திருவெற்றியூர், குடியாத்தம் மற்றும் மக்களை தொகுதியான கன்னியாகுமரி உள்ளிட்டவற்றிற்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது.
ஆனால், தமிழகத்தில் தற்போதைக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழக தலைமைச் செயலாளர், தலைமை தேர்தல் அதிகாரியின் அறிக்கையின் அடிப்படையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், தமிழகம் மட்டுமின்றி கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் தேர்தல் நடத்தும் சூழல் இல்லை எனக் கூறியுள்ளது.
இதனால், தமிழக சட்டப்பேரவைக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், திருவெற்றியூர், குடியாத்தம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என்பது சந்தேகமாகியுள்ளது.