5 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரிப்பு: கண்காணிப்பை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு..!!

2 July 2021, 10:12 am
TN Corona - Updatenews360
Quick Share

சென்னை: 5 மாவட்டங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தஞ்சை, மதுரை, திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் அதற்கான காரணத்தை ஆராய்ந்து மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

radhakrishnan - updatenews360

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது, ஊரடங்கு தளர்வுகளின் தாக்கம் அடுத்த சில நாள்களில் தான் தெரியும் என்பதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து தீவிரமாக செயல்படுத்த வேண்டும்.

குறிப்பாக, மக்கள் கூடும் இடங்களில் அதிக கவனம் செலுத்துவது அவசியம். வழிபாட்டு தலங்கள், பஸ் நிலையங்கள், சந்தைகளில் நோய் தடுப்பு விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என கண்காணிக்க வேண்டும். சில மாவட்டங்களில் வழக்கத்தை விட குறைவான மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்தும் இரண்டு நாட்களை விட அதிகமான எண்ணிக்கையில் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவ்வாறாக, தஞ்சாவூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது.

தொற்று அதிகரிப்புக்கான காரணம் என்ன எந்த இடத்தில் இருந்து தொற்று அதிகமாக பரவுகிறது என்ற விபரங்களை சம்பந்தப்பட்ட கலெக்டர்கள் கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பாதிப்பு அதிகம் உள்ள தெருக்களிலும், குடியிருப்பு பகுதிகளிலும் ஆய்வு செய்து கள நிலவரத்தை அறிதல் அவசியம்.

காய்ச்சல் முகாம்களை தொடர்ந்து நடத்துவதையும் குறைந்தபட்சம், 100 பேரையாவது பங்கேற்க வைப்பதையும் உறுதி செய்ய வேண்டும். தொற்று பரவல் குறைவாக உள்ள இடமாக இருந்தாலும் கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் குறைந்தது 20 பேரையாவது கண்காணித்து பரிசோதனை நடத்த வேண்டும். மற்றொரு புறம் தொழில் நிறுவனங்கள் போன்ற இடங்களில் நோய் தொற்று பரவுகிறதா என்பதையும் கண்காணித்தல் அவசியம். தீவிர நடவடிக்கைகளின் வாயிலாக மட்டுமே, கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்பதை உணர்ந்து செயலாற்ற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Views: - 227

0

0