சுதந்திர தின விழாவில் யாரெல்லாம் பங்கேற்க கூடாது : தமிழக அரசு அறிவிப்பு.!!

13 August 2020, 9:52 am
Independence Day - Updatenews360
Quick Share

சென்னை : ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்படும் சுதந்திர தின விழாவில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், மூத்த குடிமக்கள் பங்கேற்க வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

74வது சுதந்திர தின விழா வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. வழக்கமாக கோலாகலமாக கொண்டாடப்படும் இந்த நிகழ்வு, தற்போது கொரோனா ஊரடங்கால் பல்வேறு கட்டுபாடுகளுக்கு உட்படுத்தப்பட்டது நடைபெற உள்ளது.

அதன் படி தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளி, கல்லூரி மாணவர்கள், மூத்த குடிமக்கள் சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம் என தெரிவித்துள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: காலை 8.454 மணிக்கு தலைமை செயலக கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசியக்கொடி ஏற்றுகிறார்.

தியாகிகளின் வீடுகளுக்கே சென்று பொன்னாடை போர்த்தி ஆட்சியர் மரியாதை செலுத்த தமிழக அறிவுறுத்தப்பட்டுள்ளது. விடுதிகளுக்கு நேரில் சென்று மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இனிப்பு பெட்டகம் தர முதலமைச்சர் ஆணை பிறப்பித்துள்ளார்.

கொரோனா பணியில் ஈடுபட்ட முன்களப்பணியாளர்களுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கி முதலமைச்சர் சிறப்பிக்கிறார். சுதந்திர தின நிகழ்ச்சிகளை டிவி, வானொலியில் நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரி மாணவர்கள், மூத்த குடிமக்கள் சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம் என தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

Views: - 13

0

0