இந்தியாவில் 1.25 லட்சத்தை கடந்து ஷாக்..! தொடர்ந்து உச்சத்தில் கொரோனா…!

23 May 2020, 11:47 am
Corona_UpdateNews360 (3)
Quick Share

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 25 ஆயிரத்தை கடந்து, அதிர்ச்சியை தந்திருக்கிறது.

உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவை இப்போதைக்கு விடாது போல் தெரிகிறது. ஒட்டு மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,25,101 ஆக அதிகரித்துள்ளது.

24 மணிநேரத்தில் மட்டும் 6,654 பேர் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், 137 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கொரோனாவால்  இதுவரை 3,720 பேர் பலியாகி உள்ளனர்.

 51,784 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்துள்ளனர்.  அதிக பட்சமாக மகாராஷ்டிராவில் 44,582 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1,517 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 12,583 பேர்  குணமடைந்துள்ளனர்.

தமிழகம் மீண்டும் 2வது இடத்திற்கு வந்துள்ளது. தமிழகத்தில் 14,753 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதுவரை 98 பேர் பலியான  நிலையில், 7128 பேர் குணமடைந்துள்ளனர்.

Leave a Reply