டிக்டாக் இல்லாத இணையம் ரொம்ப சந்தோசமா இருக்கும்..! துப்பாக்கி சுடும் வீராங்கனை ஹீனா சித்து மகிழ்ச்சி..!

30 June 2020, 10:49 pm
Heena_Sidhu_UpdateNews360
Quick Share

இரண்டு முறை காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஹீனா சித்து, டிக்டாக்கிற்கு தடை விதித்ததை பாராட்டினார். பாதுகாப்பு காரணங்களால் இந்திய அரசு நேற்று தடை செய்த 59 சீன செயலிகளில் இதுவும் ஒன்றாகும்.

“டிக்டாக் போய்விட்டதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். பல வெறுக்கத்தக்க வீடியோக்கள் மற்றும் விலங்கு துஷ்பிரயோக வீடியோக்கள் டிக்டாக்கில் பதிவிடப்படுகிறது. இந்த தடையால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இணையம் டிக்டாக் இல்லாமல் மகிழ்ச்சியான இடமாக இருக்கும்!!!” என்று சித்து இன்று ட்வீட் செய்துள்ளார்.

“இது இன்னும் போகவில்லை, ஆனால் அரசாங்கம் இதைப் பின்பற்றுகிறது என்று நம்புகிறேன். வெறுக்கத்தக்க அத்தகைய உள்ளடக்கம் வைரலாக மாற அனுமதிப்பதற்கான பொறுப்பு டெவலப்பர்களிடமே உள்ளது. இந்த செயலியை பதிவேற்றுவதற்கான விதிமுறைகளை அவர்கள் மாற்றாவிட்டால் தவிர, இந்த செயலியை நம் வாழ்வில் இடம் பெற அனுமதிக்கக்கூடாது.” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கிழக்கு லடாக்கில் சீன ராணுவத் துருப்புக்களுடன் கால்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட பின்னர் இந்தியா-சீனா இருதரப்பு உறவுகள் வலுவிழந்த நிலையில், தேசிய பாதுகாப்பு தொடர்பான 59 சீன செயலிகளை அரசாங்கம் நேற்று தடை செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், டிக்டாக் உட்பட 59 சீன செயலிகளை தடை செய்வதற்கான இந்திய அரசாங்கத்தின் உத்தரவுக்கு இணங்க செயல்படுவதாகவும், இந்திய பயனர்களின் எந்த தரவையும் சீன அரசாங்கத்துடன் பகிர்ந்து கொள்ளவில்லை என்றும் டிக்டாக் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Leave a Reply