நடிகர் விஜய் திமுகவில் சேருகிறாரா?தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு!!

20 June 2021, 6:01 pm
Vijay Stalin - Updatenews360
Quick Share

நடிகர் விஜய் தனது படங்களில் சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்தும் காட்சிகளை அமைத்து, அதன்மூலம் தனக்கென்று மிகப்பெரிய ரசிகர்கள் வட்டாரத்தை, தமிழகத்தில் உருவாக்கிக் கொண்டவர். நடிகர் ரஜினிக்கு இணையாக இவருடைய திரைப்படங்கள் வசூலை குவிப்பதால், இளைஞர் ரசிகர் பட்டாளம் மற்ற நடிகர்களை விட விஜய்க்கு சற்று அதிகம்.

Breaking! Thalapathy Vijay starts political party officially? News  clarified - Tamil News - IndiaGlitz.com

தனது படங்களில் அரசியல் வசனங்களை பேசியதால் பல நேரங்களில் அவர் சர்ச்சையிலும் சிக்கிக் கொண்டதும் உண்டு.

குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளில் வெளிவந்த கத்தி, சர்க்கார், மெர்சல் ஆகிய மூன்று படங்களிலும் அவர் தற்காலத்து அரசியலை ஆவேசமாக சீண்டி இருப்பார். இந்த படங்களில் கட்சிகளின் ஊழல்களைச் சாடும் காட்சிகள் இடம்பெற்றிருந்ததால் அவருடைய ரசிகர்கள் நடிகர் விஜய் அரசியலில் குதிப்பார், தனிக்கட்சி தொடங்குவார், சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவார், ஆட்சியை கைப்பற்றுவார் என்றெல்லாம் கற்பனை சிறகுகளை விரித்தனர்.

Thalapathy Vijay to start his political party now?

இப்படியொரு ஆசை விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, அவருடைய தந்தை எஸ். ஏ.சந்திரசேகருக்கும் நிறையவே உண்டு.

அதன் தொடர்ச்சியாகத்தான், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் தேர்தல் கமிஷனில் எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு கட்சியை பதிவு செய்தார். தன்னை கட்சியின் பொதுச் செயலாளராகவும், மனைவி ஷோபாவை பொருளாளராகவும் அறிவித்தார்.

Sepoys | 10 types of Thala / Thalapathy fans

அப்போது தனக்கும் இந்த கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று உடனே மறுத்துக் கூறிய விஜய், தனது பெயர், இயக்கத்தின் புகைப்படம், கொடியை பயன்படுத்த கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட ஷோபா பொருளாளர் பதவியில் இருந்து விலகிக்கொண்டார்.

பின்னர் கடந்த ஜனவரி மாதம், இப்பிரச்சனை மீண்டும் எழுந்தது. அப்போது தலைமை தேர்தல் கமிஷனிடம் நடிகர் விஜய் ஒரு மனுவை அளித்தார். அதில் தனது தந்தை தொடங்கும் கட்சிக்கு எந்த விதத்திலும் எனது பெயரையோ எனது மன்றத்தின் பெயரையோ தொடர்புபடுத்தி அனுமதி வழங்கக் கூடாது என்று கேட்டுக்கொண்டிருந்தார். அதை தலைமை தேர்தல் கமிஷனும் ஏற்றுக் கொண்டது. அத்துடன் எஸ்ஏ சந்திரசேகரின் அரசியல் ஆசைக்கு முற்றுப்புள்ளியும் வைக்கப்பட்டது.

Vijay's mother Sobha reveals the truth; Vijay has stopped talking to his dad  | Tamil Movie News - Times of India

இதன் காரணமாக நடிகர் விஜய்க்கும் அவருடைய தந்தைக்கும் இடையே பெரும் மோதலும் ஏற்பட்டது. தந்தையும், மகனும் ஒருகட்டத்தில் ஜென்ம விரோதிகள்போல ஆகிப்போன விநோதமும் நடந்தது.

இதெல்லாம் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு நடந்த நிகழ்வுகள் என்றாலும் கூட தற்போது நடிகர் விஜயை அவருடைய ரசிகர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர் பயன்படுத்திய உத்தியை விட நூதன ஸ்டைலில் அரசியல் களத்துக்குள் தள்ளிவிட்டு இருக்கின்றனர்.

Vijay's Verithanam and why he met DMK chief Stalin - Tamil Nadu News,  Chennai News, Tamil Cinema News, Tamil News, Tamil Movie News, Power  Shutdown in Chennai, Petrol and Diesel Rate in

விஜயின் 47-வது பிறந்த நாளையொட்டி, திண்டுக்கல் நகர தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மணிக்கூண்டு பகுதி இளைஞரணி சார்பில் பிரம்மாண்ட வண்ண சுவரொட்டி ஒன்று திண்டுக்கல் நகரம் முழுவதும் ஒட்டப்பட்டு உள்ளது.

அந்த போஸ்டரில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், நடிகர் விஜய்க்கு தங்க செங்கோல் ஒன்றை வழங்குவதுபோன்ற காட்சி இடம் பெற்றிருக்கிறது. அந்த காட்சியின் பின்னணியில் சென்னை கோட்டையின் படமும் இடம்பெற்று இருப்பதுதான் விசேஷம்!

அதாவது சென்னை கோட்டையின் முன்பாக முதலமைச்சர் ஸ்டாலின், தங்க செங்கோலை நடிகர் விஜயிடம் ஒப்படைப்பதுபோல் அக்காட்சி உள்ளது. அத்துடன் ஏழை, எளிய மக்களுக்கான நல்லாட்சியை வழங்கிட தம்பி வா! தலைமை ஏற்க வா! என்று திமுகவில் நடிகர் விஜய் இணைய வேண்டும் என்பதை வலியுறுத்தும் வாசகங்களும் போஸ்டரில் இடம் பிடித்துள்ளன. இந்த போஸ்டர் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

விஜய் மக்கள் இயக்கத்தின் இந்த போஸ்டர் திமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
அதேநேரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், பல்வேறு விவாதங்களையும் கிளப்பி விட்டுள்ளது.

இதுபற்றி அரசியல் விமர்சகர்கள் கூறும்போது, “பிரபல நடிகர்களின் ரசிகர் மன்றத்தினர் தங்களது அபிமான நடிகர்களின் பிறந்தநாளின்போதும், புதிய படங்கள் வெளியாகும்போதும் தமிழகத்தின் நாளைய முதல்வரே! இந்தியாவின் வருங்கால பிரதமரே! என்றெல்லாம் போஸ்டர் அச்சிட்டு அதை ஊர் முழுக்க ஒட்டி பரபரப்பை ஏற்படுத்துவார்கள். சமூக ஊடகங்களிலும் அதை பரப்புவார்கள்.

விஜய் மக்கள் இயக்கத்தினர் அச்சிட்டிருக்கும் இந்தப் போஸ்டரை அப்படி எடுத்துக்கொள்ள முடியவில்லை. இதை ரசிகர்களின் குசும்பு வேலை என்று ஒதுக்கி விடவும் முடியவில்லை.
ஏனென்றால் தம்பியே வா! தலைமை ஏற்க வா! என்று சொல்வது, ஸ்டாலினுக்குப் பிறகு திமுகவை வழிநடத்த யாரும் இல்லை என்பதுபோல் அர்த்தமாகிறது. சென்னை கோட்டை முன்பாக முதலமைச்சர் ஸ்டாலின், விஜய்க்கு தங்க செங்கோலை வழங்குவது போன்ற காட்சி இருப்பதால் முதலமைச்சர் பொறுப்பை விஜயிடம் ஒப்படைக்க ஸ்டாலின் தயாராக இருக்கிறார் என்று கருதத் தோன்றுகிறது. இன்னொரு பக்கம் திமுக பலவீனமாக இருக்கிறது, அதை சரி செய்ய நடிகர் விஜய்தான் பொருத்தமானவர் என்று அந்த போஸ்டர் சொல்வது போலவும் உள்ளது.

தந்தை எஸ்ஏ சந்திரசேகர், தனது பெயரில் அரசியல் கட்சி தொடங்கப் போகிறார் என்பதை அறிந்தவுடன் கடும் எதிர்ப்பு தெரிவித்து அதைத் தடுத்த நடிகர் விஜய், இதுவரை தனது ரசிகர்களை கண்டித்து அறிக்கை எதுவும் விடவில்லை. அதுவும் அவர் எந்த அரசியல் இயக்கத்தையும் சார்ந்திராத நிலையில் அவருடைய ரசிகர்கள் தமிழக அரசியலில் குழப்பத்தை உருவாக்குவது போல் போஸ்டர் வெளியிட்டிருப்பதை விஜய் கண்டிக்கவில்லை. தனது ரசிகர் மன்றத்தினர், இப்படி ஏடாகூடமாக போஸ்டர் அடித்ததற்காக திமுகவினரிடம் வருத்தம் தெரிவித்து அவர் சமாதானப்படுத்தியது போலவும் இதுவரை செய்திகள் எதுவும் இல்லை.

இந்த போஸ்டர் விஜய் ரசிகர்களுக்கு வேண்டுமென்றால் மகிழ்ச்சி தருவதாக இருக்கலாம். ஆனால் நிச்சயம் முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், திமுக தலைமைக்கும் அதிர்ச்சியளிக்கும் தர்ம சங்கடமான விஷயம்தான்.

மறைந்த முதலமைச்சர் அண்ணா, கூறிய பிரபல வாக்கியம்தான், “தம்பி வா! தலைமை தாங்க வா!” என்பது. அதாவது தனது பொதுச் செயலாளர் பதவியை, நெடுஞ்செழியனுக்கு விட்டுக்கொடுப்பதற்காக அண்ணா அப்படி சொன்னார்.

Ilayathalapathi meets, greets Stalin, sets tongues wagging - DTNext.in

18.5.1956-ல் திமுகவின் 2-வது மாநில மாநாடு திருச்சியில் நடந்தது. அப்போது தலைமைப் பொறுப்புக்கு நெடுஞ்செழியனை வரவேற்று அழைத்த அண்ணா, “தம்பி வா! தலைமை தாங்க வா!! உன் ஆணைக்கு எல்லோரும் அடங்கி நடப்போம். தலைமையேற்று நடத்த வா! என்றார்.

அதைத்தான் விஜய் மக்கள் இயக்கத்தினர் பரபரப்பு போஸ்டராக அச்சிட்டு வெளியிட்டுள்ளனர்”
என அந்த அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர்.

Views: - 151

0

0