அதிமுகவை கூட்டணிக்குள் இழுக்க பாஜக பேச்சுவார்த்தையா? வானதி சீனிவாசனுடன் தங்கமணி பேசியது குறித்து ஜெயக்குமார் விளக்கம்!

Author: Udayachandran RadhaKrishnan
18 February 2024, 3:48 pm
jayakumar
Quick Share

அதிமகவை கூட்டணிக்குள் இழுக்க பாஜக பேச்சுவார்த்தையா? வானதி சீனிவாசனுடன் தங்கமணி பேசியது குறித்து ஜெயக்குமார் விளக்கம்!

சிந்தனை சிற்பி சிங்கார வேலரின் பிறந்தநாளையொட்டி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அவரது சிலையின் கீழ் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருஉருவப் படத்துக்கு அதிமுக அமைப்பு செயலாளர் திரு ஜெயக்குமார் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சிந்தனை சிற்பியின் புகழை போற்றும் வகையில் அதிமுக ஆட்சியில் மணிமண்டபமும், ஒரு ஆண்டும் சிந்தனை சிற்பி சிங்காரவேலன் பெயரில் இரண்டு லட்ச ரூபாய் பரிசு தொகையும், எட்டு கிராம் தங்கமும் கொண்ட விருது வழங்கவும் ஆவணம் செய்யப்பட்டது.

திமுக ஆட்சிக்கு வந்து நாளில் இருந்து மீனவ மாவட்டங்கள் தொடர்ந்து சொல்வேனா துயரத்துக்கு ஆளாகி வருகிறது. இலங்கை கடற்படையிடம் தொடர்ந்து சிறைபிடிக்கப்படுவதும், படகுகள் சேதப்படுத்தப்படுவதும் தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில், அவற்றை தடுக்க தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாகவும், இலங்கை கடற்படையினால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து மத்திய அரசுக்கு தமிழக அரசு போதிய அழுத்தம் கொடுக்கவில்லை எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த நான்காம் தேதி இந்திய எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 23 மீனவர்களின் படகுகள், மீன்பிடி சாதனங்கள் சேதப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் 23 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டு உள்ளனர். 20 மீனவர்கள் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள மீனவர்களை விடுவிக்க மீனவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் அவற்றை கண்டு கொள்ளாமல் திமுக அரசு செயல்படுவதாகவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டு உள்ள மீனவர்களை விடுவிக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு உடனடியாக அழுத்தம் கொடுத்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்

போதை கலாச்சாரத்தை இரும்பு கரம் கொண்டு ஒழிக்காமல் கரும்பு கரம் காட்டுவதால் தான் தமிழகத்தில் போதை கஞ்சா கலாச்சாரம் அதிகரித்திருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கஞ்சா போதை வஸ்துகள் ஒழிக்க எவ்வித நடவடிக்கையும் திமுக அரசு எடுக்காததால் சர்வ சாதாரணமாக போதை பொருட்கள் பழக்கம் தமிழகத்தில் அதிகரித்திருப்பதாக கூறிய அவர், போதைப் பொருட்கள் கலாச்சாரத்தை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அவற்றை கட்டுப்படுத்த முடியும் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

பாஜக உடன் கூட்டணி இல்லை. இதை பலமுறை சொல்லிவிட்டோம்.
பாஜக கூட்டணி அதிமுக கதவு எப்பொழுது அடைக்கப்பட்டது.

நீட் விவகாரத்தில் மோசடி பேர்வழி திமுக. நீட் விவகாரத்தில் மக்களை ஏமாற்றி உள்ளது திமுக.

சட்டமன்றத்தில் நட்பு ரீதியான அடிப்படையில் மட்டுமே பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மற்றும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் தங்கமணி ஆகியோர் சந்தித்து பேசினர் என்றார்.

Views: - 227

0

0