அரசியல் நாகரீகமே இல்லையா? அதிகார மமதையில் அராஜகம் : கேபி முனுசாமியை தடுத்த திமுகவுக்கு இபிஎஸ் கண்டனம்!

Author: Udayachandran RadhaKrishnan
11 September 2024, 12:48 pm

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ராமன்தொட்டி பகுதியில் மத்திய அரசின் PMGSY திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் விழாவில், வேப்பனஹள்ளி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், கழக துணைப் பொதுச்செயலாளருமான அன்புச் சகோதரர் திரு. கே.பி.முனுசாமி அவர்களை விடியா திமுகவைச் சேர்ந்தவர்கள் பங்கேற்க விடாமல் அராஜகம் செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அரசின் திட்டங்களுக்கான துவக்க விழாவில் கலந்துகொள்வது மரபு.

மேலும் படிக்க: சாலை பணியால் அதிமுக – திமுகவினர் மோதல் : முன்னாள் அமைச்சர் மறியலால் பரபரப்பு!!

ஆனால், அரசியல் நாகரிகம் என்பது கொஞ்சம் கூட இல்லாமல், அதிகார மமதையில் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினரை அவமதிக்கும் வகையில் அராஜகப் போக்குடன் செயல்படும் விடியா திமுகவின் இந்த நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது என குறிப்பிடடுள்ளார்.

  • enforcement department charges against the actors who acting in online rummy app நான் சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடிக்கவில்லை- அமலாக்கத்துறை வழக்கில் பிரகாஷ் ராஜ் புது விளக்கம்?