அணிக்குள் இன்னொரு அணியா?…திமுகவில் திடீர் சலசலப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
28 December 2021, 7:37 pm
Kanimozhi Vs Udhayanithi - Updatenews360
Quick Share

உறுப்பினர் சேர்க்கையில் சர்ச்சை திமுகவின் மகளிரணி செயலாளராக மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகளும், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி எம்பியுமான கனிமொழி உள்ளார். அதேபோல், முதலமைச்சர் ஸ்டாலினின் மகனும், சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி திமுகவில் இளைஞரணி செயலாளராக பதவி வகித்து வருகிறார்.

கனிமொழி – உதயநிதி மறைமுக மோதல்?

இவர்கள் இருவரிடையேயும் திமுக உறுப்பினர் சேர்க்கையில் ஒரு மறைமுக மோதலும், புகைச்சலும் ஏற்பட்டிருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த 18-ந்தேதி நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பேசிய திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் திமுகவில் அதிகபட்ச உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Udhayanidhi Stalin declares Rs 4.89 lakh income, Rs 27 crore assets, and 22  FIRs | The News Minute

அவரது உத்தரவின்படி, மாநிலம் முழுவதும் திமுக இளைஞரணி, மகளிரணி நிர்வாகிகள் இளைஞர்களையும், இளம் பெண்களையும் கட்சியில் உறுப்பினர்களாக சேர்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கனிமொழி அறிக்கையால் சலசலப்பு

இந்த நிலையில்தான் அண்மையில் திமுகவில் இளம்பெண்களை சேர்ப்பது குறித்து கனிமொழி வெளியிட்ட ஒரு அறிக்கையில், “தமிழகத்தின் மக்கள் தொகையில் சரிசமமான பங்கு உடையவர்கள் பெண்கள்.

அதிலும் நாளைய சமுதாயத்தின் சிந்தனையை வடிவமைக்கும் திறன் பெற்றவர்கள். இன்றிருக்கும் 18 முதல் 30 வயதுடைய இளம் பெண்கள். திமுகவின் மையக் கோட்பாடாக விளங்கும் சமூக நீதி சிந்தனையின் வெளிப்பாடே, அரசியலில் பெண்கள் தனக்கென உரிமைகளை உருவாக்குவது.

Kanimozhi Karunanidhi: Daughter Dutiful - Open The Magazine

அந்த விதத்தில் இன்றிருக்கும் 18 முதல் 30 வயதிற்குள்ளான இளம் பெண்களை திமுகவில் ‘மகளிரணி உறுப்பினர்களாக’ இணைத்து அவர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது. அரசியலில் ஆர்வம் காட்ட துடிக்கும் இளம் பெண்களுக்கு வாய்ப்புகள் அளிப்பதைத் தாண்டி, நாம் 18 முதல் 30 வயதிற்குள் இருக்கும் இளம் பெண்களை மகளிரணி உறுப்பினர்களாக இணைத்து அவர்களுக்கு அரசியலின் மேல் ஈடுபாடு ஏற்பட வழி செய்து நமது கட்சியின் எதிர்காலத்திற்கான அடித்தளம் வலுவாக உள்ளதை உறுதி செய்வோம்” என்று குறிப்பிட்டிருந்தார்.

அவர் இப்படி திடீரென்று ஒரு அறிக்கையை வெளியிட்டது, திமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. திமுகவில் உறுப்பினர் சேர்க்கை என்பது வழக்கமாக நடக்கக் கூடிய ஒன்றுதானே, எதற்காக கனிமொழி இப்படி தனி அறிக்கை வெளியிடுகிறார், என்ற குழப்பம் அரசியல் ஆர்வலர்களிடையேயும் ஏற்பட்டது.

அரசியல் பார்வையாளர்கள் கருத்து

மேலும் கனிமொழி தனது ஒரே அறிக்கையில் மூன்று இடங்களில் 18 முதல் 30 வயது வரையிலான இளம்பெண்களை திமுகவில் உறுப்பினர்களாக சேர்ப்பது பற்றி வலியுறுத்தி சுட்டிக்காட்டி கூறியது, பலருக்கு வியப்பையும் ஏற்படுத்துவதாக இருந்தது.

Asked if I am an Indian for not speaking in Hindi at airport: DMK MP  Kanimozhi

இந்த அறிக்கையின் பின்னணி குறித்து, அரசியல் பார்வையாளர்கள் கூறும்போது, “திமுகவின் இளைஞர் அணி செயலாளரான உதயநிதி, தனது அணியில் 18 வயது முதல் 30 வயதுள்ள இளம் பெண்களையும் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதனால் கட்சியில் அவருடைய செல்வாக்கு, அதிகரிக்கும். கனிமொழி மகளிரணி செயலாளராக பதவி வகித்தாலும் கூட அவரால் 30 வயதுக்கு மேற்பட்ட மூத்த தலைமுறை பெண்களிடம் மட்டுமே அதிகாரம் செலுத்த முடியும். அதனால் கட்சியில் தனக்குள்ள உரிமை, செல்வாக்கு பறிபோய் விடாமல் தக்க வைத்துக்கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் இப்படி அறிக்கை வெளியிட்டு இருக்கலாம்” என்று கருத்து தெரிவித்தனர்.

பெண்களை கட்சியில் சேர்த்த உதயநிதி

கனிமொழி இப்படி அறிக்கை வெளியிட்ட அதே நாளில்தான் கடந்த ஞாயிற்றுக்கிழமை கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடத்தப்பட்ட திமுக உறுப்பினர் சேர்க்கை முகாமின்போது உதயநிதி, திமுக இளைஞர் அணியில் 2 ஆயிரம் பெண்களை திமுக உறுப்பினராக இணைத்துக் கொண்டுள்ளார். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது.

Shadow of Sterlite on scion showdown in Tamil Nadu - Telegraph India

இதனால் தனது உத்தரவையும் மீறி, 30 வயதுக்குட்பட்ட பெண்களை மகளிரணியில் உறுப்பினர்களாக சேர்க்காமல் திமுக இளைஞரணியில் சேர்த்திருப்பதால் கனிமொழி கோபம் அடைந்திருக்கிறார், என்கின்றனர்.

கனிமொழி கோபம்

திமுகவில் மகளிரணி என்று தனியாக ஒரு அணி இருக்கும்போது இளைஞரணியில் எதற்காக இளம்பெண்களை சேர்க்க வேண்டும் என கனிமொழி ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படும் நிலையில், கோவை நிகழ்வு அவரை பெரும் அதிர்ச்சியும் அடைய வைத்துள்ளதாம்.

Is Kanimozhi being sidelined within DMK by Stalin? - Hindustan Times

இப்படி நடக்கலாம் என்பதை ஓரளவுக்கு முன்கூட்டியே யூகித்து, தான் வெளியிட்ட அறிக்கைக்கு சிறிதும் பலன் இல்லாமல் போய்விட்டதே என்று அவர் வருத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஒரு அணிக்குள் இன்னொரு அணி

மேலும் இதுதொடர்பாக தனக்கு நெருக்கமான திமுக தலைமை நிர்வாகிகளிடம், பேசிய கனிமொழி, அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான தனது மனக்குமுறலை கொட்டித் தீர்த்ததாகவும் சொல்கிறார்கள். “கட்சியில் மகளிரணி என்றால் ஒட்டுமொத்தமாக பெண்கள் இருக்கும் அணியைத்தானே குறிக்கும். இது அமைச்சருக்கு தெரியாதா?… இதில் ஏன் ஒரு அணிக்குள் இன்னொரு அணியைக் கொண்டு வரவேண்டும்?…அதற்கு என்ன அவசியம் வந்தது?” என்று அப்போது அவர் மனவேதனைப் பட்டதாகவும் சொல்கிறார்கள்.

உதயநிதியை வைத்து கனிமொழிக்கு `செக்'? - கழக குடும்பத்தில் அரசியல் ஆடுபுலி|  Kanimozhi supporters upsets over Udhayanidhi's new moves within the party

இந்தத் தகவல் அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்களின் காதுகளில் விழ அவர்கள் இதை தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்றிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு பேச்சு உள்ளது. இந்த விவகாரம் சமூக ஊடகங்களிலும் பெரும் பேசுபொருளாக மாறி இருக்கிறது.

அரசியல் விமர்சகர்கள் கருத்து

அரசியல் விமர்சகர்கள் இதுபற்றி கூறும்போது, “இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே திமுக இளைஞர் அணியில், இளம் பெண்கள் அணி என்னும் ஒன்றை தனியாக உருவாக்கி உதயநிதி தலைமையில் திமுகவில் இளம் பெண்களை உறுப்பினர்களாக சேர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அப்போது இப்பிரச்சினை கிடப்பில் போடப்பட்டது. இப்போது மீண்டும் அதே விவகாரம் எழுந்துள்ளது” என்று தெரிவித்தனர்.

ஒரு சிலர் ட்விட்டரில், “திமுக தொண்டர்களின் உணர்வுகளை கனிமொழி கொச்சைப்படுத்தி, புண்படுத்தி இருக்கிறார்” என்று சங்கேத வார்த்தைகளில் பதிவிட்டுள்ளனர்.

சவுக்கு சங்கர் ட்விட்

கனிமொழியின் தீவிர ஆதரவாளரும், மூத்த பத்திரிகையாளருமான சவுக்கு சங்கர், இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் “சேப்பாக் சே டீம் கோபத்துக்கு ஆளானார், கனிமொழி. அவர் மீது திமுக தலைமை நடவடிக்கை எடுக்குமா?… விவாதிப்போம்” என்று கூறியிருக்கிறார்.

Savukku Shankar Wiki, Biography, Age, Family, Website, Books, Images - News  Bugz

திமுக நிர்வாகிகளோ, “இளைஞர் அணியில் அதிகளவில் இளைஞர்களை சேர்க்கவேண்டும் என்பதுதான் திமுக தலைவர் ஸ்டாலினின் விருப்பம். அதைத்தான் உதயநிதியும், கனிமொழியும் செயல்படுத்தி வருகிறார்கள். இது ஒரு ஆரோக்கியமான போட்டிதான். இதில் எந்த மோதலும் இல்லை” என்று மறுக்கிறார்கள்.

Views: - 337

0

0