சீட் பெற போட்டா போட்டி : திமுகவிடம் மல்லுக்கட்டும் இஸ்லாமிய கட்சிகள்! விழிபிதுங்கும் ஸ்டாலின்!!

24 January 2021, 10:01 pm
DMK Islam Parties - Updatenews360
Quick Share

தமிழ்நாட்டில் இஸ்லாமியர் அமைப்புகள், இஸ்லாமியர் கட்சிகள் என்னும் வரிசையில் சுமார் 20-க்கும் மேற்பட்ட இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன.

இவற்றில் அரசியல் சார்ந்து இயங்கும் கட்சிகள் என்று எடுத்துக்கொண்டால் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி, SDPI என்னும் இந்திய சமூக ஜனநாயக கட்சி ஆகிய நான்கையும் குறிப்பிட்டுச் சொல்லாம்.

தமிழகத்தில் சுமார் 4 சதவீதம் வரை இஸ்லாமியர்கள் உள்ளனர். இவர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக வசிக்கின்றனர். குறிப்பாக கோவை தெற்கு, தொண்டாமுத்தூர், தஞ்சாவூர், வேலூர், ராணிப்பேட்டை, ஆற்காடு, வாணியம்பாடி, ஆம்பூர், திண்டுக்கல், நாகைப்பட்டினம், கடையநல்லூர், ராமநாதபுரம், திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மணப்பாறை, அரவாக்குறிச்சி, ஒட்டன்சத்திரம், கரூர், விழுப்புரம், பூம்புகார், கிருஷ்ணகிரி உள்பட 30 தொகுதிகளில் கணிசமான அளவில் வாழ்கின்றனர்.

இந்த தொகுதிகளில் குறைந்த பட்சம் 30 ஆயிரம் முதல் அதிகபட்சம் 75 ஆயிரம் வரையிலான முஸ்லிம் வாக்காளர்கள்
இருப்பதால் சட்டப்பேரவைத் தேர்தல், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் இரண்டிலும் இவர்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர்.

அதாவது இஸ்லாமியர்கள் யாரை ஆதரிக்கிறார்களோ அக்கட்சி தான் அந்தத் தொகுதியில் வெற்றிபெறும் என்கிற சூழல் நிலவுகிறது.

4 முக்கிய இஸ்லாமியர் கட்சிகளில் திமுகவுடன் பன்னெடுங்காலமாக கூட்டணி அமைத்து போட்டியிடுவது இந்திய யூனியன் முஸ்லீம் லீக்தான். வெற்றி, தோல்விகளைப் பற்றி எப்போதும் கவலைப்படாமல் இக்கட்சி 50 ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவுடன் இணக்கமான உறவை கொண்டுள்ளது.

IUML moves SC challenging Citizenship Amendment Bill

இதேபோல் அரசியல் சார்பற்ற இஸ்லாமியர் இயக்கங்கள் பல தொடர்ந்து திமுகவை ஆதரித்து வருகின்றன. எம்ஜிஆர் 10 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்ட போதிலும் அவரை இஸ்லாமியர் இயக்கங்கள் ஆதரித்தது கிடையாது. அதிமுக என்றாலே விலகி இருந்தே வந்துள்ளன.

இஸ்லாமியர்களின் ஏகோபித்த அரசியல் கட்சியாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இருப்பதால் அக் கட்சியின் செல்வாக்கு தமிழ்நாட்டில் நிலையான ஒன்றாகவே இருக்கிறது.

மனிதநேய மக்கள் கட்சி உடையாது ஜவாஹிருல்லா கூட்டியது நாடக பொதுக்குழு  கட்சியில்...

ஆனாலும் இஸ்லாமிய இளைஞர்கள் அரசியலில் அதிகம் ஆர்வம் காட்ட ஆரம்பித்தபின் இக்கட்சி சற்று சுணக்கம் கண்டிருப்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.

அதனால்தான் மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி SDPI கட்சி ஆகியவை 2010-ம் ஆண்டுக்கு பின் தமிழ்நாட்டில் வளர்ச்சி காணத் தொடங்கின.

Why Karnataka Government Wants to Ban SDPI?

இதில் ஒரு மாபெரும் அரசியல் மாற்றத்தையும் பார்க்க முடிந்தது. அதுவரை அதிமுக என்றாலே ஒதுங்கி நின்ற இஸ்லாமியர் கட்சிகள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தலைமையை நோக்கி பார்வையைத் திருப்பின.

தேசிய கட்சியான பாஜகவுடன் ஜெயலலிதா இடைவெளியை கடைப்பிடித்து வந்ததால் மனிதநேய மக்கள் கட்சி 2011 சட்டப் பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்தது. அக்கட்சி ஆம்பூர், ராமநாதபுரம், சேப்பாக்கம் ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டில் வெற்றி கண்டது. சேப்பாக்கத்தில் மட்டும் தோற்றது.

ஆனால் 2016 தேர்தலுக்கு முன்பு இக்கட்சி பிளவுபட்டது. மனிதநேய ஜனநாயக கட்சி என்று இன்னொரு புதிய கட்சி உதயமானது.

2016 சட்டப்பேரவை தேர்தலில் நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக், திமுக கூட்டணியில் வாணியம்பாடி, கடையநல்லூர், விழுப்புரம், பூம்புகார், மணப்பாறை ஆகிய 5 தொகுதிகளில் போட்டியிட்டு கடையநல்லூரில் மட்டும் வெற்றி கண்டது.

AIADMK launching TV channel

இதேபோல் திமுக அணியில் போட்டியிட்ட இன்னொரு இஸ்லாமியர்கள் கட்சியான மனித நேய மக்கள் கட்சி நாகை, ராமநாதபுரம் ஆம்பூர், தொண்டாமுத்தூர் ஆகிய நான்கு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தது.

இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட மனித நேய ஜனநாயக கட்சி நாகப்பட்டினம் ஒட்டன்சத்திரம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு நாகப்பட்டினத்தை மட்டும் கைப்பற்றியது.

DMK leader Stalin's mere lip service won't help Muslims

அப்போது தமிழக அரசியலுக்கு புதிய வரவான SDPI கட்சி 2016-ல் திமுகவுடன் கூட்டணி அமைக்க ஆர்வம் காட்டி பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டது. உடன்பாடு ஏற்படாததால் அக்கட்சி தனித்து 30 இடங்களில் தனித்து போட்டியிட்டு அத்தனை தொகுதிகளிலும் தோல்வி கண்டது.

இதில் ஒரு ஆச்சரியமான ஒற்றுமை என்னவென்றால் 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் எதிரும், புதிருமாக இருந்த இஸ்லாமியர் அரசியல் கட்சிகள் நான்கும் தற்போது திமுக அணியில் கை கோர்த்து நிற்கின்றன.

இங்கேதான் திமுகவுக்கு சிக்கல் ஆரம்பிக்கிறது. ஏற்கனவே திமுகவில் முஸ்லிம் தலைவர்கள் ஏராளமானோர் உள்ளனர். இவர்களில் பலர் வரும் தேர்தலில் போட்டியிட மிகுந்த ஆர்வமாக இருக்கிறார்கள்.

மதுரையில் இதயங்களை இணைப்போம் மாநாடு... ஸ்டாலின், வைகோ, திருமாவளவன்  பங்கேற்பு | Madurai Indian Union Muslim League Conference: MK Stalin will  participate on 16th february - Tamil Oneindia

இந்த நிலையில்தான் இஸ்லாமியர் கட்சிகளின் பலத்திற்கு ஏற்ப தொகுதிகளை ஒதுக்கீடு செய்யவேண்டிய கட்டாயமும், நெருக்கடியும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு ஏற்பட்டுள்ளது.

கடந்த தேர்தலில் ஒதுக்கீடு செய்த அளவிற்கு தொகுதிளை கொடுக்க முடியவில்லை என்றாலும் கூட குறைந்தபட்சம் ஒவ்வொரு கட்சிக்கும் 3 சீட்டுகளாவது தர வேண்டிய கட்டாயத்தில் ஸ்டாலின் உள்ளார்.

இது ஒரு பக்கம் திமுகவுக்கு தலைவலி என்றால் இந்த 4 கட்சியினரும் குறிப்பிட்ட ஒரு சில தொகுதிகளை தங்களுக்கே ஒதுக்கவேண்டும் என்றும் கோரிக்கை வைப்பார்கள். தனி சின்னத்திலும் போட்டியிடவும் விரும்புவார்கள்.

இதனால் அவர்களின் மனம் கோணாமல் தொகுதிகளை கொடுக்க வேண்டிய இடியாப்ப சிக்கல் திமுகவுக்கு உள்ளது.
அதேநேரம் எண்ணிக்கையை குறைத்தாலும் பிரச்சனை.
இக்கட்சிகள் நாங்கள் கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்துப்போட்டியிடுவோம் என்று அறிவிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

சீட் கிடைக்காவிட்டால் SDPI கடந்த தேர்தலைப்போல் இந்த முறையும் தனித்து களமிறங்கலாம் என்கிறார்கள்.
ஹைதராபாத் எம்பி ஒவைசியின் AIMIM கட்சி இந்த முறை தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் களம் இறங்குவது நிச்சயம்.
கடந்த தேர்தலில் தமிழ்நாட்டில்
2 தொகுதிகளில் போட்டியிட்ட இக்கட்சி இம்முறை தனித்து 30 இடங்களில் போட்டியிட முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

MIM may field three new candidates

அக்கட்சி SDPIயுடன் கைகோர்த்து தேர்தல் களத்தில் குதிக்கும் வாய்ப்பும் அதிகம்.

தங்களை சிறுபான்மையினர் பிரிவு மாநாட்டிற்கு அழைத்து விட்டு பின்னர் அழைப்பே விடுக்கவில்லை என்று திமுக மறுத்ததால் ஸ்டாலின் மீது கடும் கோபத்தில் ஒவைசி இருக்கிறார்.

இந்த விஷயத்தில் திமுக தன் மூக்கை உடைத்து, அவமானப்படுத்தி விட்டதாகவும் அவர் கருதுகிறார். அதனால்தான் அவர் தனித்துப் போட்டியிடுவதில் மிக உறுதியாக இருக்கிறார்.

ஒருவேளை அக்கட்சி திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் குறைந்தபட்சம் 7 முதல் 10 தொகுதிகளை கேட்கும். ஒவைசி கேட்கும் தொகுதிகளை கொடுத்துவிட்டால் திமுக அணியில் தற்போதுள்ள மற்ற இஸ்லாமியர் கட்சிகள் நிச்சயம் போர்க்கொடி உயர்த்தும். அது திமுகவுக்கு தலைவலி போய் திருகுவலி வந்த கதையாகி விடும்.

DMK plans to divide party in four zones for better campaign ahead of Tamil  Nadu Assembly polls- The New Indian Express

இதனால் ஸ்டாலின் என்ன செய்வதென்று தெரியாமல் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்திருப்பதாக அண்ணா அறிவாலயத்தில் இருந்து தகவல்கள் கசிகின்றன.

மேலும் தமிழக இஸ்லாமியர் கட்சிகள் ஸ்டாலினிடம் இது தொடர்பாக இப்போதே நச்சரிக்கவும் தொடங்கிவிட்டனவாம். “எங்களுக்கு எத்தனை சீட்டுகள்? எந்தெந்த தொகுதிகள்? என்பதை உறுதி செய்யுங்கள்” என இந்தக் கட்சிகள் மல்லுக்கட்டி வருகின்றன.

DMK allots 2 seats each to MDMK, VCK, CPI - Tamil Nadu News, Chennai News,  Tamil Cinema News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai,  Petrol and Diesel Rate in Chennai

ஏற்கனவே திமுக கூட்டணியில் மதிமுக, விசிக இரண்டும் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை ஒதுக்க கேட்டு வரும் நிலையில் இஸ்லாமியர் கட்சிகளின் கோரிக்கையால் ஸ்டாலின் பெரும் தவிப்புக்கு உள்ளாகியிருக்கிறார் என்கிறார்கள்.

இந்தக் கட்சிகளை சரி சமமாக பாவித்து நடத்தாவிட்டால் 30 தொகுதிகளும் போயே போச்சு! என்கிற இக்கட்டான சூழல் ஸ்டாலினுக்கு பீதியை கிளப்பி விட்டு இருப்பதென்னவோ உண்மை.

Views: - 0

0

0