பதவி போனாலும் பரவாயில்லை.. நான் சிறை செல்லத் தயார் : அதானி விவகாரத்தில் பரபரப்பை கிளப்பி ஆ.ராசா!!

Author: Udayachandran RadhaKrishnan
10 April 2023, 9:45 am
A Raja - Updatenews360
Quick Share

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி புதுக்கோட்டையில் திருக்கோகர்ணத்தில் தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது.

கூட்டத்தில் துணை பொதுசெயலாளர் ஆ.ராசா எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற போது கொரோனா காலம், மழை வெள்ளம் என பல்வேறு இடர்பாடுகளை முன்னின்று எதிர்கொண்டு தீர்த்து வைத்தார். அவர் முதலமைச்சராக பொறுப்பேற்ற போது ரூ.6 லட்சம் கோடி கடனில் தமிழகம் இருந்தது.

பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கவில்லை, கருணாநிதிக்கு ஏன் ரூ.80 கோடியில் நினைவு சின்னம் என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

தமிழகத்திற்கும், தமிழ் மொழிக்கும், தமிழக மக்களுக்கு பல நல்ல திட்டங்களுக்கு கையெழுத்திட்ட கருணாநிதிக்கு பேனா சின்னம் வைக்க கூடாதா?. வறுமை கோர்ட்டிற்கு கீழ் உள்ளவர்களின் சதவீதம் தமிழகத்தில் தான் குறைவு.

அதானி விவகாரத்தில் ரூ.10 லட்சம் கோடி முறைகேடு நடந்தது குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பினர். அவர் பதில் அளிக்காமல் மவுனம் காப்பது ஏன்?.
அமலாக்க துறை, சி.பி.ஐ., வருமான வரித்துறை ஆகியவற்றுக்கு பயந்து மம்தா பானர்ஜி, சந்திரசேகரராவ், ஜெகன்மோகன் ரெட்டி, ஒடிசா, பஞ்சாப் முதலமைச்சர்கள் யாரும் பேசவில்லை.

இவ்வளவு பெரிய ஊழலை தட்டிக்கேட்ட ஒரே இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம் தான். அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் என அவர் கூறினார்.

என் மீது ரூ.1.76 லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்ததாக குற்றம்சாட்டினார்கள், அதற்காக பாராளுமன்றத்தை பாஜக முடக்கியது.

அந்த குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில நானே நேரடியாக வாதாடி குற்றமற்றவன் என்பதை நிரூபித்தேன். அதே போன்று அதானி விவகாரத்தில் மோடி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த குற்றச்சாட்டிற்கு மோடி பதில் கூறாததின் மர்மம் என்ன?

அதானி குற்றவாளி என்றால் மோடியும் குற்றவாளி தான். இதை கூறியதற்காக என் மீது வழக்கு தொடர்ந்து தண்டனை வாங்கி கொடுத்து என்னுடைய பதவியை பறித்தாலும் பரவாயில்லை நான் சிறைக்கு செல்ல தயாராக உள்ளேன் என சவால் விடுத்துள்ளார்.

Views: - 298

0

0