அண்ணாமலை பற்றி அப்படி சொல்வது தவறு… இதெல்லாம் நம்பும்படி இல்லை : ஆதரவுக்கரம் நீட்டிய சீமான்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 September 2023, 8:42 pm
Seeman - Updatenews360
Quick Share

அண்ணாமலை பற்றி அப்படி சொல்வது தவறு… இதெல்லாம் நம்பும்படி இல்லை : ஆதரவுக்கரம் நீட்டிய சீமான்!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போவது அவர் கூறியதாவது:- நான் முதல்வர் வேட்பாளர் என்று சொல்லும் அளவுக்கு அண்ணாமலை குழந்தையும் இல்லை பயித்தியக்காரனும் இல்லை.

நம்ம கேள்வி பட்டது வரைக்கும்.. 2,3 விஷயம் சொல்கிறார்கள். அண்ணா பற்றி குறை சொன்னது.. 20 இடம் கேட்டதாக சொல்கிறார்.. அதற்கு இவர்களுக்கு (அதிமுக) உடன் பாடு இல்லை.

பிறகு சசிகலா, தினகரன், ஓபிஎஸ் இவர்களை எல்லாம் இணைத்து வலிமையாக்குங்கள் என்று பாஜக கருத்து சொன்னதாகவும் அதற்கு அதிமுக உடன்படவில்லை என்றும் விவாதங்களை பார்க்க முடிகிறது.
அதில் அண்ணாமலை முதல்வர் வேட்பாளராக ஆசைப்பட்டார் என்று சொல்வது புதுக்கருத்தாக உள்ளது. அது நம்பும்படியாக இல்லை. வரும் நாடாளுமன்ற தேர்தலில் பெரிய கூட்டணி நான் தான்..

நான் மக்களோடு சேர்ந்து கூட்டணி வைக்க போகிறேன். நான் முழுமையாக மக்களை நேசிக்கிறேன்.. நம்புகிறேன். இது இரண்டும் தான் ஒரு தலைவனுக்கான அடிப்படை தகுதி என நம்புகிறேன். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் நான் வேலை செய்கிறேன்.

அதனால் நான் தனித்து தான் நிற்பேன். என் மக்களை நேசிக்காதவன் நம்பாதவனுக்கு தான் படை தேவை. நான் என்னுடைய வீரத்தை என்னுடைய பலத்தை நம்பிதான் போர்க்களத்திற்கு போகிறேனே தவிர… என்னோடு இவர் வருகிறார்.. இவர் 10 பேர் அடிப்பாரா… இவர் 5 பேரை அடிப்பாரா… இதெல்லாம் கழுதைப்புலி, செந்நாய்க்கு சரி… புலிக்கு சரியில்லை.

வேட்டைக்கு போகும் போது எல்லாரையும் கூட்டிட்டு வரும்.. ஆனால், புலி ஒற்றை ஆளாகத்தான் வரும். என்னையை நேசிக்கிற ஒரு கூட்டம் வருதா… திராவிட கட்சிகளோடு இந்திய கட்சிகளோடு உடன்பாடு இல்லை.. அண்ணன் சொல்வது சரியாகத்தான் இருக்கு… அவருடன் போகலாம் என்று வந்தால் யோசிக்கலாம்.

இந்த தேர்தலிலும் தனித்து தான் போட்டி… 2026லும் தனித்துதான் போட்டி.. காவிரி விவகாரம் தொடர்பாக சென்னையில் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும். ஜனநாயாக முறையில் போராட்டம் இருக்கும். அவர்களை போல அடித்து பேருந்தை மறித்து சண்டை போடுவது இருக்காது.

கடந்த முறை கர்நாடாகவில் இருந்து வந்த பேருந்தை என் தம்பி கடல் தீபன் நிறுத்தி விட்டார். அதற்கு 90 நாள் குண்டாசில் போட்டார்கள். ஆனால், அவர்கள் அவ்வளவு அடிக்கிறார்கள்… ஆனால், ஒரு எப்.ஐ.ஆர் கூட கிடையாது. இவ்வாறு சீமான் கூறினார்.

Views: - 151

0

0