ஆட்சிக்கு வந்ததும் சாதி வாரி கணக்கெடுப்பு… உண்மையை பேசுவதால் எனக்கு எதிர்ப்பு அதிகரிப்பு : ராகுல்காந்தி பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
30 September 2023, 7:05 pm
Rahul - Updatenews360
Quick Share

ஆட்சிக்கு வந்ததும் சாதி வாரி கணக்கெடுப்பு… உண்மையை பேசுவதால் எனக்கு எதிர்ப்பு அதிகரிப்பு : ராகுல்காந்தி பேச்சு!!

மத்திய பிரதேசத்தில் உள்ள 230 சட்டப்பேரவை இடங்களுக்கும் இந்த வருட இறுதிக்குள் தேர்தல் நடைபெற உள்ளது. அந்த மாநிலத்தில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. எதிர்க்கட்சியாக காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது.

முதல்வராக சிவராஜ் சிங் சவுகான் பொறுப்பில் இருந்து வருகிறார். விரைவில் தேர்தல் வர உள்ளதால் பிரதான கட்சி தலைவர்கள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி இன்று ஷாஜப்பூர் மாவட்டத்தில் பொதுக்கூட்டத்தின் பங்கேற்று உரையாற்றினார். அவர் கூறுகையில், காங்கிரஸ் மத்திய பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்தவுடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும், இதன் மூலம் இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் மக்கள் தொகை தெரிய வரும். இதனை கொண்டு அவர்களின் நிலை அறிந்து அதற்கு ஏற்ப திட்டங்கள் வகுக்கப்படும் என்றார்.

இதுவரை அவர்களின் சரியான மக்கள் தொகை கணக்கெடுப்பை ஆளும் அரசு எடுக்கவில்லை. பாஜகவின் எம்எல்ஏக்கள், எம்பிகளுக்கு எந்தவித அதிகாரமும் பங்களிப்பு இருப்பதில்லை. அந்தந்த துறை கேபினேட் செயலாளர்கள் மற்றும் 90 அதிகாரிகளைக் கொண்டுதான் நாடே இயங்கி வருகிறது. அதிகார வர்க்கமும், ஆர்.எஸ்.எஸ் பிரதிநிதிகளும் தான் நாட்டை வழிநடுத்துகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் அதானி விவகாரத்தை நான் கையில் எடுத்தேன். உடனே அடுத்ததாக எனது மக்களவை எம்பி பதவி ரத்து செய்யப்பட்டது. அதில் எனக்கு எந்த கவலையும் இல்லை. நான் உண்மையை பேசி வருகிறேன்.

நாட்டின் துறைமுகம், விமான நிலையம், உட்கட்டமைப்புகள் என எல்லா துறையிலும் தற்போது அதானியே காணப்படுகிறார். ஒவ்வொரு நாளும் அதானி விவசாயிகளின் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்துக் கொள்கிறார்.

ஊடகங்கள் மோடிஜியை 24 மணி நேரங்களும் காட்டுகிறார்கள். சிவராஜ் சிங் சவுகானை காட்டுவார்கள், ஆனால் எங்களை காட்ட மாட்டார்கள். இதற்கு காரணம் ஊடக நண்பர்களின் ரிமோட் கண்ட்ரோல் அதானி கையில் உள்ளது என்றும் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார்

Views: - 253

0

0