ஜம்மு – காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை : பாதுகாப்பு படையினர் அதிரடி

2 July 2021, 3:48 pm
Indian_Army_Anti_Terror_Ops_UpdateNews360
Quick Share

ஜம்மு – காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தெற்கு காஷ்மீர் பகுதியில் புல்வாமா மாவட்டத்தின் ஹஞ்சின் ராஜ்போரா என்னுமிடத்தில் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் சம்பந்தப்பட்ட பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது, அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதற்கு பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். இதில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

உயிரிழந்தவர்கள் லஷ்கர்-இ- தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. மேலும், இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் பதுங்கியுள்ளனரா..? என தீவிர தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டுள்ளனர்.

Views: - 95

0

0