திட்டமிட்டபடி ஜன.,26ல் டிராக்டர் பேரணி : மத்திய அரசுடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

22 January 2021, 7:20 pm
Farmers_Protest_UpdateNews360
Quick Share

டெல்லி : வேளாண் சட்டங்களுக்கு எதிராக அறிவிக்கப்பட்ட டிராக்டர் பேரணி திட்டமிட்டபடி ஜன.,26ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் 2 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, மத்திய அரசும் 10 கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியது. ஆனால், அனைத்தும் தோல்வியில் முடிந்தது.

இந்த நிலையில், விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் மத்திய அரசுடனான 11ம் கட்ட பேச்சுவார்த்தை விஞ்ஞான் பவனில் நடைபெற்றது. சுமார் 4 மணிநேரம் நடந்த இந்தப் பேச்சுவார்த்தையில் எந்தவித முடிவும் எட்டப்படவில்லை. குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுமாடு விவசாயிகள் விடுத்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்தது.

இதைத் தொடர்ந்து, வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்த விவசாயிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் பேசியதாவது :- வேளாண் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளவும், ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒத்தி வைப்பதாகவும் மத்திய அரசு கூறியது. ஆனால், அதனை நாங்கள் ஏற்கவில்லை. சலுகைகளை ஏற்றால் மட்டுமே அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படும் என மத்திய அரசு கண்டிப்பாக கூறிவிட்டது.

எங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 26ம் தேதி திட்டமிட்டபடி டிராக்டர் பேரணி நடத்தப்படும், என்றார்.

Views: - 0

0

0