ஜெயலலிதாவின் வெண்கலச்சிலை திறப்பு.. ஜெ.,வின் பிறந்த நாள் அரசு விழாவாக அறிவிப்பு.. அதிரடி காட்டும் முதலமைச்சர் பழனிசாமி!!

Author: Babu
28 January 2021, 12:45 pm
jayalalitha statue - updatenews360
Quick Share

சென்னை : மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வெண்கலச்சிலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக திறந்து வைத்தனர்.

பெண் கல்விக்கு அதி முக்கியத்துவம் கொடுத்தது மற்றும் பெண் கல்விக்காக பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியதற்காக, சென்னையில் உள்ள உயர்கல்வி மன்ற வளாகத்திற்கு ஜெயலலிதாவின் பெயர் சூட்டப்பட்டது. மேலும், இந்த வளாகத்தில் ஜெயலலிதாவின் முழு உருவச்சிலை நிறுவப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, உருவச்சிலைக்கான பணிகள் முடிவடைந்த நிலையில், 9 அடி உயரம் கொண்ட ஜெயலலிதாவின் திருவுருவச் சிலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்து வைத்தனர்.

இதைத் தொடர்ந்து, நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது :- சோதனைகளை கடந்து அரசியலில் தனக்கென தனியிடத்தை பிடித்தவர் ஜெயலலிதா. பெண்கள் மற்றும் குழந்தைகளின் அரணாக திகழ்ந்தார். ஜெயலலிதா ஆட்சியில் உயர் கல்வி பயின்றவர்களின் எண்ணிக்கை 100க்கு 32 ஆக இருந்தது. தற்போது, அவரது வழியில் நடந்து வரும் அதிமுக அரசின் நடவடிக்கையால் அது 49 ஆக உயர்ந்துள்ளது.

ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்.,24ம் தேதி இனி அரசு விழாவாகக் கொண்டாடப்படும். அன்றைய தினம் அரசு சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தப்படும், எனக் கூறினார்.

Views: - 62

0

0