விழுப்புரத்தில் உதயமாகிறது ஜெயலலிதா பல்கலைக்கழகம் : பேரவையில் இன்று மசோதா தாக்கல்..!!!

5 February 2021, 11:06 am
Quick Share

சென்னை : விழுப்புரத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயரில் புதிய பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பான மசோதாவை சட்டப்பேரவையில் இன்று தாக்கலாகிறது.

திருவள்ளூர் பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரித்து புதிதாக ஜெயலலிதா பல்கலைக்கழகம் என்னும் கல்வி நிறுவனத்தை உருவாக்க தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. ஜெயலலிதாவின் நினைவாக உருவாக்கப்படும் இந்தப் பல்கலைக்கழகமானது, விழுப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கல்லூரிகளை நிர்வாகிக்கும் அதிகாரம் வழங்கப்படுகிறது.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உரையாற்ற உள்ளார். அதில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பிறகு தேதி குறிப்பிடாமல் அவை ஒத்திவைக்கப்பட உள்ளது.

Views: - 8

0

0