இந்தியா உட்பட 4 நாடுகளின் கடற்படைகள் கூட்டுப் பயிற்சி: இன்றுடன் நிறைவு பெறுகிறது…!

6 November 2020, 11:26 am
malabar tarining - updatenews360
Quick Share

இந்தியா உள்பட 4 நாடுகளின் கடற்படைகள் இணைந்து மேற்கொண்ட 4 நாள் கடற்படை கூட்டுபயிற்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது.

கடந்த 3ம் தேதி விசாகப்பட்டினம் வங்கக்கடல் கடற்கரைப் பகுதியில் தொடங்கிய பயிற்சியில், நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிப்பது, வான் வழியில் நடத்தப்படும் தாக்குதல்களை கப்பலில் இருந்து எப்படி எதிர்கொள்வது உள்ளிட்ட நவீன பயிற்சிகளை மேற்கொள்கின்றன.

இதில், இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் கடற்படைகள் இணைந்து மேற்கொண்ட, 4 நாள் மலபார் கடற்படை கூட்டுப் பயிற்சி இன்றுடன் நிறைவடைகிறது.

சீனாவிற்கு எதிராக ஒற்றை கருத்துக்களை கொண்ட, க்வாட் அமைப்பை சேர்ந்த 4 நாடுகளும் இந்த கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்த பயிற்சியின் 2வது கட்டம் அரபிக்கடல் பகுதியில் வரும் 17ம் தேதி தொடங்க உள்ளது.

Views: - 14

0

0