ஒற்றையா..? ரெட்டையா-னு அப்பறம் பாத்துக்கலாம்… முதல்ல கட்சிய மீட்டெடுக்கிற வழிய பாருங்க : கீ.வீரமணி வேண்டுகோள்..!!!

Author: Babu Lakshmanan
2 July 2022, 8:54 am
Quick Share

ஒற்றை தலைமையா இரட்டை தலைமையா என அதிமுக போட்டி போட்டுக் கொண்டிருப்பது தாய் கழகத்திற்கு வேதனையாக இருப்பதாக திராவிட கழக தலைவர் கீ.வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திராவிடர் கழக தலைவர் கி வீரமணி தஞ்சையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- உண்மையில் எதிர்க்கட்சி யார் என்று போட்டி போடக்கூடிய சூழலில், எதிர்க்கட்சியில் யார் தலைவர் என்பதில் சிக்கலை ஏற்படுத்தியிருப்பது உண்மையிலேயே வருத்தமளிப்பதாக உள்ளது.

ஒற்றை தலைமையா..? இரட்டை தலைமையா..? முக்கோண தலைமையா..? என்று கேட்பதைவிட, அடமானம் வைத்த பொருளை மீட்க வேண்டும். மோடியா..? லேடியா..? என்று கேட்ட கட்சி, தற்பொழுது மோடி தான் என்ற திசையில் சென்று கொண்டிருக்கிறது. தலைமையை முடிவு செய்யும் முன்பு தங்கள் கட்சியை அவர்கள் மீட்க வேண்டும், என்ற வேண்டுகோளையும் வைத்தார்.

Views: - 127

0

0