வெளிப்படையான நிர்வாகமே நேர்மையான அரசாட்சிக்கு வித்திடும்: மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன்….!!

12 October 2020, 3:49 pm
kamal-haasan - updatenews360
Quick Share

வெளிப்படையான நிர்வாகமே நேர்மையான அரசாட்சிக்கு வித்திடும் என்று கமல்ஹாசன் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளர்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது,

தகவல் அறியும் உரிமை சட்டம் அமலுக்கு வந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. 2.2 லட்சம் கோரிக்கைகள் இன்றும் மத்திய மாநில தகவல் உரிமை ஆணையங்களில் நிலுவையில் உள்ளன.

வெளிப்படையான நிர்வாகமே நேர்மையான அரசாட்சிக்கு வித்திடும்.

ஒவ்வொரு குடிமகனும் தமக்கான உரிமையினைப் பெறத் தெளிந்தால்,நாமே தீர்வு.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 51

0

0