‘ஏழு தலைமுறைக்கும் அவர் புகழ் வாழும்’ : எஸ்.பி.பி. மறைவுக்கு கமல் வெளியிட்டுள்ள உருக்கமான இரங்கல் வீடியோ..!

25 September 2020, 2:23 pm
kamal - - updatenews360
Quick Share

சென்னை : உடல்நலக்குறைவால் காலமான பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பி.யின் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் வீடியோ வெளியிட்டுள்ளார்.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம், தொற்றில் இருந்து மீண்டாலும், தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் குணமடைய வேண்டும் என்று உலகமெங்கும் உள்ள அவரது ரசிகர்களும், பிரபலங்களும் பல்வேறு கட்ட பிரார்த்தனைகளை முன்னெடுத்தனர்.

மீண்டு வந்து விடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று அவரது உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமானதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று பிற்பகல் 1.04 மணிக்கு எஸ்.பி.பி.யின் உயிர் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டது. இது அவரது ரசிகர்களுக்கு மட்டுமின்றி, சினிமா பிரபலங்களுக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அவரது மறைவிற்கு பல்வேறு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் வீடியோ வெளியிட்டுள்ளளார். அந்தப் பதிவில், “அன்னைய்யா S.P.B அவர்களின் குரலின் நிழல் பதிப்பாக பல காலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேறு. ஏழு தலைமுறைக்கும் அவர் புகழ் வாழும்,” எனப் பதிவிட்டுள்ளார்.

Views: - 11

0

0