டிச.,3 வரை பிரச்சனையில்லை… அதுக்கு அப்புறம்தான் : கமல் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை

Author: Babu Lakshmanan
1 December 2021, 3:46 pm
kamal - updatenews360
Quick Share

சென்னை : கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன், தொற்று பாதிப்பில் இருந்து முழுவதும் குணமடைந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. நாளொன்று சராசரி பாதிப்பு 700-ஐ விடக் குறைந்துள்ளது. இந்த நிலையில், நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசனுக்கு கடந்த 22ம் தேதி கொரோனா தொற்று உறுதியானது. இது அவரது கட்சியினருக்கும், ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, அவர் விரைந்து குணமடைய வேண்டும் என்று திரையுலக பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் தங்களின் வேண்டுதல்களை முன்வைத்து வந்தனர். இந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கமல் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற கமல்ஹாசன் தொற்று பாதிப்பில் இருந்து முழுவதும் குணமடைந்தார். இருப்பினும் டிச.,3ம் தேதி வரை அவர் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர் டிச.,4ம் தேதி முதல் வழக்கமான பணிகளில் ஈடுபடுவார், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையின் இந்த அறிக்கையால் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Views: - 393

0

0