உள்ளாட்சி தேர்தலில் கட்டாயம் அவர்களுடன் மட்டும் கூட்டணி கிடையாது : போட்டுடைத்த கமல்ஹாசன்..!!
Author: Babu Lakshmanan26 August 2021, 4:58 pm
சென்னை : உள்ளாட்சி தேர்தலில் எந்தக் கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்பது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார். அப்போது, உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிட முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டது.
கூட்டத்தில் அவர் பேசியதாவது :- அடுத்து நடைபெற இருக்கும் 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. கூட்டணிக்கு வருபவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். ஆனால், இருபெரும் கட்சிகளுடன் கூட்டணி கிடையாது. கட்சியின் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும், என தெரிவித்துள்ளார்.
0
0