திமுக-வ விட்டுத்தள்ளுங்க… எங்க கூட வாங்க!! : காங்கிரசை மீண்டும் அழைக்கும் கமல்..!!! அதிர்ச்சியில் ஸ்டாலின்..!!

6 March 2021, 4:20 pm
kamal - ks alagiri - updatenews360
Quick Share

தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவுடன் முரண்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தங்களது கூட்டணியில் வந்து சேருமாறு காங்கிரசுக்கு மக்கள் நீதி மய்யம் அழைப்பு விடுத்துள்ளது.

ஏப்ரல் 6ம் தேதி நடக்கும் சட்டப்பேரவை தேர்தலுக்காக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மனித நேய மக்கள் கட்சி (2), இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (3), விடுதலை சிறுத்தைகள் (6), இந்திய கம்யூனிஸ்ட் (6) கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை ஒருவழியாக நடத்தி முடித்து விட்டது.

இன்னும் காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுடனான பேச்சுவார்த்தை இழுபறி நீடித்து வருகிறது. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுகவிற்கு அடுத்த பெரிய கட்சியான காங்கிரஸ் 30 தொகுதிகளை கேட்டு வருகிறது. ஆனால், 20 முதல் 23 தொகுதிகளை மட்டுமே கொடுப்பதாக தெரிவித்துள்ளது. இதனால், காங்கிரஸ் – திமுக இடையே இழுபறி நீடித்து வருகிறது.

பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு நடுவே காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் கண்ணீர் விட்ட கேஎஸ் அழகிரி, திமுக மீதான அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதனால், திமுக – காங்கிரஸ் கூட்டணி நீடிக்குமா..? என்ற சந்தேகம் எழுந்தது.

இதனிடையே, வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் 12ம் தேதி தொடங்க இருப்பதால், 8ம் தேதிக்குள் தொகுதி பங்கீட்டை முடித்துக் கொள்ள வேண்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலின், கூட்டணி கட்சிகளுக்கு உத்தரவை பிறப்பித்துள்ளார். ஆனால், திமுக தற்போது பேச்சுவார்த்தைக்கு எந்தவிதமான அழைப்பும் விடுக்க வில்லை என்று காங்கிரஸ் தெரிவித்தது.

இந்த நிலையில், தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவுடன் முரண்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தங்களது கூட்டணியில் வந்து சேருமாறு காங்கிரசுக்கு மக்கள் நீதி மய்யம் அழைப்பு விடுத்துள்ளது. ஏற்கனவே காங்கிரஸ் – மக்கள் நீதி மய்யம் கூட்டணி இடையே மறைமுக பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், கமல் தற்போது வெளிப்படையாகவே காங்கிரசுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது திமுகவிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 65

0

0