அச்சத்தில் இருந்து துணிவுக்கு… ஊழலில் இருந்து நேர்மைக்கு; நம்மவரின் பொங்கல் வாழ்த்து..!!!

13 January 2021, 5:40 pm
Quick Share

சென்னை : தமிழக மக்களுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களால் உற்சாகமாகக் கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி, தமிழக அரசியல் தலைவர்கள் நாட்டு மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது :- அச்சத்தில் இருந்து துணிவுக்கு;
ஊழலில் இருந்து நேர்மைக்கு; தீமைகளில் இருந்து நன்மைக்குச் செல்லும் பயணத்தைத் தொடங்கியிருக்கிறோம். பாதையில் உற்சாகம் பொங்கட்டும். நந்தமிழர் திருநாளில் நன்னம்பிக்கை பொங்கட்டும். அதன் குறியீடாக பொங்குக பொங்கல், எனத் தெரிவித்துள்ளார்.

Views: - 7

0

0