டார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் : பிரச்சாரத்தின் போது மைக் வேலை செய்யாததால் ஆத்திரம் (வீடியோ)

Author: Babu Lakshmanan
31 March 2021, 5:27 pm
Kamal - updatenews360
Quick Share

புதுச்சேரி : புதுச்சேரியில் பிரச்சாரத்தின போது மைக் வேலை செய்யாத ஆத்திரத்தில் டார்ச்லைட்டை கமல்ஹாசன் தூக்கிய அடித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைக்கு வரும் 6ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் முதல்முறையாக மக்கள் நீதி மய்யம் களம் காண்கிறது. இந்தக் கட்சியுடன் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை எதிர்த்து களம் கண்டுள்ளார். தனது தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் கமல்ஹாசன், தமிழகம் முழுவதும் தங்களது கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் புதுச்சேரியில் இன்று மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, தனது பிரச்சார வாகனத்தில் இருந்தவாறு கூடியிருந்த பொதுமக்களிடம் உரை நிகழ்த்த முற்பட்டார். ஆனால், அவர் கையில் வைத்திருந்த மைக் திடீரென வேலை செய்யவில்லை. இதனால், கோபமடைந்த கமல்ஹாசன், தனது கையில் இருந்த மைக்கை வாகனத்தில் உள்ளே இருந்தவர்கள் மீது தூக்கியடித்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், என்னதான் இருந்தாலும் கமல்ஹாசனுக்கு இத்தனை கோபம் ஆகாது என்று கமெண்ட்டுக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Views: - 236

0

0