இது ஒரு நாடு.. இது ஒரு தேர்வு.. மாணவர்கள் தற்கொலை : கொந்தளிக்கும் கமல்ஹாசன்..!!!

Author: Babu Lakshmanan
14 September 2021, 3:37 pm
MNM Kamal - Updatenews360
Quick Share

சென்னை : நீட் தேர்வு அச்சத்தினால் மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் நீட் தேர்வின் மூலம் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. நீட் தேர்வுக்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதிமுக ஆட்சியின் போது நீட் விவகாரத்தில் கடும் விமர்சனங்களை முன்வைத்து வந்த திமுக, ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வதாக வாக்குறுதி அளித்தது.

ஆனால், நீட் தேர்வு நடந்து முடிந்ததற்கு பிறகே, நீட் விலக்கு தீர்மானத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இதனிடையே, நீட் தேர்வுக்கு முன்னதாக சேலத்தை சேர்ந்த தனுஷ் என்னும் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் இருந்து மீள்வதற்குள் தேர்வை சரியாக எழுதாததால் மன உளைச்சலில் இருந்த அரியலூரைச் சேர்ந்த மாணவி கனிமொழி இன்று தற்கொலை செய்தது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நீட் தேர்வு அச்சத்தால் மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் தனது கருத்துக்களை கூறியுள்ளார். அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “ஜெய்ப்பூரில் 35 லட்சம் ரூபாய்க்கு நீட் தேர்வின் வினாத்தாள்கள் வினியோகமாகிக் கொண்டிருக்க இங்கே தனுஷ், கனிமொழி போன்ற அப்பாவி மாணவர்கள் தங்கள் இன்னுயிரை நீத்துக்கொண்டிருக்கிறார்கள். இது ஒரு நாடு, இது ஒரு தேர்வு, இந்த வணிக நாடகத்தை அரங்கேற்ற ஒரு அரசு.சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்!,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 232

0

0