‘விலை உயர்வு, தொழில் பாதிப்பு பஞ்சத்திற்கான கட்டியம் கூறலே’ : எச்சரிக்கை விடும் கமல்ஹாசன்..!

24 August 2020, 5:28 pm
kamal - updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் வேலைவாய்ப்பின்னை அதிகரித்து வருவதாக ஆய்வில் கூறப்பட்டுள்ள நிலையில், மத்திய, மாநில அரசுகளுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி, வேலையின்மை போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு இடையே கொரோனாவும் வந்ததால் மக்களின் வாழ்வாதாரம் கேள்வி குறியாகியுள்ளது. சிறு குறு தொழிலாளர்கள் முதல் பட்டதாரிகள் வரை பலரும் வேலை வாய்ப்புகளை இழந்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இதை சரிகட்ட மத்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. இருப்பினும் நாடு முழுவதும் மாநில வாரியாக வேலை இன்மை பிரச்னை நாளுக்கு நாள் வலுபெற்று வருகிறது. வேலையின்மை அதிகம் நிலவும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகமும் இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் விடுத்துள்ள பதிவில், “சமீபத்திய ஆய்வுகள் வேலையிழப்பும்,வருமான இழப்பும் உச்சம் தொட்டு விட்டதென்கிறது. விலை உயர்வு,தொழில் பாதிப்பு,குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு இவையனைத்தும் வரப்போகும் பஞ்சத்திற்கான கட்டியம் கூறலே. தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பமும் இதை உணரத்துவங்கிவிட்டது. அரசே விழித்தெழு,அல்லேல் விலகிவிடு,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 33

0

0