REAL ஜெயலலிதாவிடம் ஆசி பெற்ற REEL ஜெயலலிதா : தலைவி பட ரிலீஸை முன்னிட்டு மெரினாவில் மரியாதை!!

Author: Babu Lakshmanan
4 September 2021, 11:01 am
kangana - updatenews360
Quick Share

தலைவி திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், மறைந்த முன்னாள் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் நடிகை கங்கனா ரணாவத் மரியாதை செலுத்தினார்.

தமிழகத்தின் இரும்புப் பெண் என்று அழைக்கப்பட்டவரும், முதலமைச்சராக இருந்தவருமான ஜெயலலிதாவின் வாழ்க்கையை தழுவி படம் எடுக்கப்பட்டுள்ளது. ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கணா ரணாவத் நடித்துள்ளார். இவருடன் எம்ஜிஆராக அரவிந்த்சாமியும் நடத்துள்ளார். இவருடன் மதுபாலா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கொரோனா தொற்றினால் இத்தனை நாட்கள் மூடப்பட்டிருந்த திரையரங்குகள் கடந்த 23ம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, செப்.,10ம் தேதி தலைவி திரைப்படம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதனை அதிமுக தொண்டர்களும், ஜெயலலிதா, எம்ஜிஆர் ரசிகர்களும் பெரிதும் எதிர்பார்த்துள்ளனர்.

இந்த நிலையில், சென்னை – மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் கங்கனா ரணாவத் மரியாதை செலுத்தினார். தலைவி படம் வெளியாக உள்ள நிலையில், ஜெயலலிதா நினைவிடத்திற்கு அவர் நேரில் சென்றிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் மற்றும் கருணாநிதி நினைவிடத்திலும் கங்கனா ரணாவத் அஞ்சலி செலுத்தினார். அவருடன் தலைவி படத்தின் இயக்குநர் ஏஎல் விஜயும் உடனிருந்தார்.

Views: - 337

0

0