செருப்பில் அத்திவரதர் புகைப்படம்.. ‘இது திமுக ஆட்சிடா’ என கொக்கரித்த தி.க. பிரமுகருக்கு கிடைத்த தர்மஅடி…!!

Author: Babu Lakshmanan
3 September 2021, 12:48 pm
kanjipuram attack - updatenews360
Quick Share

சென்னை : காஞ்சிபுரத்தில் செருப்பில் அத்திவரதர் புகைபடத்தினை சொருகி சர்ச்சையை ஏற்படுத்திய திராவிட கட்சியை சேர்ந்த பிரமுகரை சிவகாஞ்சி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட தடை விதித்த தமிழக அரசினை கண்டித்தும், அனுமதி வழங்க கோரியும், நேற்று காலை காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள சங்குபாணி விநாயகர் கோவில் வாயிலில் விநாயகர் துதி பாடி, இந்து முன்னணியினர் அறவழிபோராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது, கோவிலின் வாயிலில் தேங்காய், பழ கடை வைத்திருக்கும் கடையின் உரிமையாளர் பூபதி என்பவர் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறார்கள் என்பதை அறிந்து, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் உலக புகழ்பெற்ற அத்திவரதர் புகைப்படத்தில் செருப்பை சொருகி வைத்திருந்தார்.

இதை கண்ட இந்து முன்னணியினர் ஆத்திரமடைந்து பூபதியிடம் கேட்ட போது, தான் திராவிடக் கழகத்தைச் சேர்ந்தவன். இது திமுக ஆட்சி, அப்படித்தான் செய்வேன்,” என தேணாவட்டாக கூறியுள்ளார். இதனைக் கேட்டு கொந்தளித்த இந்து முன்னணியினர், அவரது கடையினை அடித்து உடைத்தனர். அப்போது பூபதி பூ அறுக்கும் கத்தியால் முன்னணி பிரமுகர் சதிஷ் என்பவரின் கையை கிழித்தாக கூறப்படுகிறது.

இதனையெடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், பூபதியை காவல்நிலையம் அழைத்து சென்றனர். இதனையெடுத்து இந்து முன்னணியின் சிவகாஞ்சி காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், கடையின் உரிமையாளர் பூபதியிடம் விசாரணை மேறகொண்டனர். அப்போது அவர் தனது எதிர்ப்பினை தெரிவிக்கும் வகையில் அச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையெடுத்து அவரை கைது செய்த போலீசார், மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காஞ்சிபுரம் கிளை சிறையில் அடைத்தனர்.

Views: - 403

0

1