மாஜி எம்எல்ஏ உட்பட குமரி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் 10 பேர் நீக்கம் : ஓபிஎஸ் – இபிஎஸ் அறிவிப்பு

20 July 2021, 10:59 am
EPS OPS - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ உள்பட 10 பேரை கட்சியில் இருந்து நீக்கம் செய்து அதிமுக உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- அதிமுகவின் கொள்கை மற்றும் கோட்பாடுகளுக்கு முரணாக , கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் வகையில் செயல்படும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட துணை செயலாளரும், முன்னாள் எம்எல்ஏ.,வுமான ராஜன், மாவட்ட இணைச் செயலாளர் லதா ராமச்சந்திரன் ஆகியோர் கட்சியின் அடிப்படை பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல, தோவாளை ஒன்றிய முன்னாள் செயலாளர் கிருஷ்ணகுமார், ஆரல்வாய்மொழி பேரூர் செயலாளர் மாடசாமி, தோவாளை ஒன்றிய அவைத்தலைவர் மோசஸ் ராமச்சந்திரன், வடக்கு ஒன்றிய பொருளாளர் தென்கரை மகாராஜன், தெற்கு ஒன்றிய இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர் பாலசுப்ரமணியன் என்ற சுதாகர், தோவாளை வடக்கு ஒன்றிய மாவட்ட பிரதிநிதி ஜெயந்தி, மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த கலை இலக்கிய அணி துணைச் செயலாளர் நாஞ்சில் டோமினிக், மாவட்ட இளைஞர், இளம்பெண்கள் பாசறை இணைச் செயலாளர் வரதராஜன் ஆகியோரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்பிலிருந்து நீக்கி வைக்கப்படுகின்றனர், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 120

0

0

Leave a Reply