பாராட்டாம இருக்கவே முடியாது : திருநங்கைகளுக்கு ஒரு சதவீத இடஒதுக்கீடு வழங்கிய கர்நாடகா…!!! இந்தியாவிலேயே முதல் மாநிலம்..!!

21 July 2021, 8:38 pm
Transgender - updatenews360
Quick Share

அரசு வேலைகளில் திருநங்கைகளுக்கு ஒரு சதவீத இடஒதுக்கீட்டை வழங்கிய முதல் மாநிலம் என்ற பெருமையை கர்நாடகா பெற்றுள்ளது.

கர்நாடகாவில் மாநில சிறப்பு ரிசர்வ் கான்ஸ்டபிள் படையில் திருநங்கையினருக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிராக சங்கமா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் அம்மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாக அறிக்கை சமர்பிக்க உத்தரவிட்டது. அதன்படி, இன்று அறிக்கை சமர்பிக்கப்பட்டது.

அதில், கர்நாடக சிவில் சர்வீஸ் விதியில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு ஏற்கனவே இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது. அதாவது, கடந்த ஜுலை 6ம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையின்படி, அனைத்து அரசு வேலைகளிலும் பொதுப் பிரிவு மற்றும் இதர பிரிவுகளிலும் திருநங்கைகளுக்கு ஒரு சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டியது.

மேலும், அரசு விண்ணப்பங்களில் பாலினம் தொடர்பான கேள்வியில் ஆண், பெண் மற்றும் மற்றவர்கள் என்னும் பிரிவையும் சேர்க்க அந்த அரசாணையில் உத்தரவிடப்பட்டிருந்தது. திருநங்கைகள் யாரும் வேலைக்கு விண்ணப்பிக்கவில்லை என்றால் அதே பிரிவில் இருக்கும் ஆண் அல்லது பெண்களுக்கு வழங்கப்படலாம் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாகத் தனியாக வழக்கு தொடர்ந்தால், அரசுக்கு வழிகாட்டுதல்களை வழங்குவது குறித்து பரிசிலினை செய்யப்படும் எனக் கூறி, கர்நாடக அரசுக்கு நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர்.

Views: - 91

0

0

Leave a Reply