முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.1,000 அபராதம் : கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்க நடவடிக்கை..!

By: Babu
1 October 2020, 8:35 pm
madurai corona updatenews360
Quick Share

கர்நாடகா ; முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் நடமாடுபவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என கர்நாடகா அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் முழுவீச்சில் மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும், மகாராஷ்டிரா, தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் மட்டும் பாதிப்புகள் அதிகரித்தே காணப்படுகிறது.

மேலும், கொரோனா கட்டுப்பாடுகளை பொதுமக்கள் மீறாமல் இருக்கும் வண்ணம், அபராதங்களை கடுமையாக்கி மாநில அரசுகளின் சார்பில் சட்டங்கள் இயற்றப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், கர்நாடகாவில் பொது இடங்களில் முகக்கவசம் இல்லாமல் வருபவர்களுக்கு ரூ 1,000 அபராதம் விதிக்கப்படும் என்று அம்மாநில மருத்துவ கல்வி அமைச்சர் கே. சுதாகர் தெரிவித்துள்ளார்.மேலும், கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும், சமூக இடைவெளியை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

Views: - 43

0

0