இரவிலும் தொடர்ந்த எம்பி ஜோதிமணியின் உள்ளிருப்பு போராட்டம் : ‘வாய்மையே வெல்லும்’ என கரூர் ஆட்சியர் பதிலடி..!!

Author: Babu Lakshmanan
26 November 2021, 8:59 am
karur mp -collector - updatenews360
Quick Share

கரூர் : மாற்றுத்திறனாளிகள் முகாம் நடத்துவதில் கரூர் ஆட்சியர் பாரபட்சம் காட்டுவதாகக் கூறி காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, ஆட்சியர் அலுவலகத்தில் இரவிலும் உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்ந்தார்.

கரூரில் மத்திய அரசின் திட்டத்தின்கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்குவது தொடர்பான முகாம்களை நடத்தவில்லை என குற்றம்சாட்டி, காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். ஆட்சியர் பிரபு சங்கர் நேரில் சென்று, அவரை சமாதானப்படுத்தினார். விரைவில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான முகாம்கள் நடத்தப்படுமென உறுதியளித்தார்.

karur mp dharna - updatenews360

இதனிடையே, கரூர் ஆட்சியர் பிரபுசங்கர் மீது புகார்களை முன்வைத்து, தலைமைச் செயலர் இறையன்புவிற்கு எம்.பி. ஜோதிமணி புகார் மனு அனுப்பினார். அதில், கரூர் ஆட்சியர் பிரபுசங்கரின் மேசையிலிருந்து இரண்டு சதவிகிதம் வரை கட்டாய வசூல் முடிந்த பிறகுதான் கோப்புகள் நகரும் என்று மக்கள் மத்தியில் பரவலாக கருத்து நிலவுவதாக ஜோதிமணி குறிப்பிட்டுள்ளார். கரூர்‌ ஆட்சியர்‌ மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு புகாரில் அவர் கோரியுள்ளார்.

இந்நிலையில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, நீதிக்கும் நியாயத்திற்கும் நாங்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் என்று ட்விட்டரில் ட்விட் செய்து, அதில் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி உறங்குவது போல் டுவிட் செய்துள்ளார்.

முன்னதாக, வாய்மையே வெல்லும் என ஆட்சியர் பிரபுசங்கர் டுவிட்டரில் பதிவிட்டிருப்பது, அவரது உள்ளிருப்பு போராட்டத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது. மேலும், அடுத்தடுத்து டுவிட்டரில் கருத்துக்களை பதிவிட்டு வருவது இருவருக்கும் இடையேயான மோதல் தொடருவதை அம்பலப்படுத்தியுள்ளது.

Views: - 276

0

0

Leave a Reply