அதிமுக கவுன்சிலரை மைக்கை தூக்கி அடிக்க பாய்ந்த திமுக கவுன்சிலர்… மேஜையை தூக்கி வீசி அடாவடி… மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு..!!

Author: Babu Lakshmanan
26 June 2023, 4:39 pm
Quick Share

கரூர் மாநகராட்சி கூட்டத்தில் கேள்வி கேட்ட அதிமுக கவுன்சிலர் மைக்கை தூக்கிக் கொண்டு திமுக கவுன்சிலர் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் மாநகராட்சி மன்ற சாதாரண கூட்டம் கவிதா கணேசன் தலைமையில் நடைபெற்றது. கடந்த மாதம் அமைச்சர் செந்தில்பாலாஜி வீடுகளில் வருமான வரி அதிகாரிகளின் சோதனையை தொடர்ந்து, கடந்த மூன்று முறை மாமன்ற கூட்டம் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது. இதை தொடர்ந்து, இன்று மாமன்ற கூட்டம் நடைபெற்றது. இதில் மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

கருர் மாநகராட்சிக்கு உட்பட்ட பசுபதிபாளையம், சணப்பிரட்டி, காந்திகிராமம், வெள்ளாளப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலை ஓரத்தில் உள்ள முட்பூதர்களை அகற்ற ஜேசிபி இயந்திரம் மூலம் ஒரு லட்சத்து 87 ஆயிரம் செலவு செய்து துப்புரவு பணியை மேற்கொண்டனர். இந்த செலவினம் தொடர்பான அனுமதியை மாமன்ற கூட்டத்தில் வைத்த போது, அதிமுகவை சேர்ந்த வெள்ளாளப்பட்டி உறுப்பினர் சுரேஷ் வெள்ளாளப்பட்டியில் எந்த பணியும் செய்யாமல் கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்தார்.

இதை தொடர்ந்து, அதிகாரிகள் வேலை செய்யப்பட்டது என விளக்கம் தெரிவித்தனர். அதற்கான புகைப்படத்தை மாமன்றத்தில் ஆதாரமாக காட்ட வேண்டும் என அதிமுக கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து, ஆவேசமடைந்த திமுக உறுப்பினர் சக்திவேல், ‘உன் சவுரியத்துக்கு போட்டோ காட்ட முடியாது. இஷ்டம் இருந்தால் கூட்டத்தில் இருக்கலாம். இல்லை என்றால் வெளியே போகலாம்,’ என கூச்சலிட்டார். மேலும், ஆவேசமடைந்த அவர் மைக், தூக்கிக் கொண்டு தாக்கச் சென்றதால் பரபரப்பு ஏற்றது. தொடர்ந்து, தகாத வார்தையால் கவுன்சிலர் சக்திவேல் பேசியதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அப்பொழுது, மற்றொரு திமுக கவுன்சிலர் லாரன்ஸ் அதிமுக கவுன்சிலர்கள் அமர்ந்திருந்த டேபிளை தள்ளிவிட்டு அவர்களை வெளியே போக சொல்லி மிரட்டினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 212

0

0