லஞ்ச ஒழிப்பு சோதனை திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையின் முதல்கட்டம் : முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர்

Author: Babu Lakshmanan
24 July 2021, 4:20 pm
Quick Share

எனது இல்லம் மற்றும் உதவியாளர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தியது திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையின் முதல் கட்டம். என கரூரில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறினார்

கரூரில் இன்று அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடைபெற்றுள்ளது. எனது வங்கிக் கணக்குகள் எதுவும் இதுவரை முடக்கப்படவில்லை. லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனை தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கண்டனம் தெரிவித்துள்ளனர். என இல்லம், தொழிற்சாலைகளில் எடுக்கப்பட்ட பணத்துக்கு கணக்கு உள்ளது. லஞ்ச ஒழிப்பு போலீசார் சம்மன் அனுப்பிய பிறகு உரிய கணக்க சமர்பிப்போம்.

இந்த சோதனை எதிர்பார்த்ததுதான். இதை சட்டரீதியாக எதிர்கொள்வோம். எனக்கு கரூரிலும், சென்னையிலும் சொந்த வீடு கிடையாது. 35 ஆண்டுகாலம் தொழில் செய்து வருகிறேன். பொய்யான செய்திகளை பத்திரிகைகள் பரப்பி வருகின்றன.

பொய் வழக்குகளை போட்டு கரூர் மாவட்டத்தில் அதிமுகவை முடக்க நினைக்கிறார்கள். கரூரில் அதிமுகவை சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பல தொல்லைகளை கொடுத்து திமுகவுக்கு கட்சி மாற வைக்கின்றனர். கொரோனா ஊசி வழங்கும் டோக்கன்களை திமுகவினர் எடுத்துச் செல்கின்றனர். திமுகவின் அராஜக போக்கு நீடிக்காது. போக்குவரத்து துறையில் பணிபுரியும் அதிமுகவினரை பல ஊர்களுக்கு பணியிட மாறுதல் செய்கின்றர். இது நல்லதல்ல, என்று தெரிவித்தார்.

Views: - 342

0

0