சிறுத்தையை கொன்று சமைத்து சாப்பிட்ட கொடூரன்கள் கைது : யானையை தொடர்ந்து சிறுத்தையையும் வேட்டையாடிய மனிதர்கள்..!!

23 January 2021, 6:28 pm
cheetah killed - updatenews360
Quick Share

கேரளாவில் சிறுத்தையை கொன்று, அதன் இறைச்சியை சமைத்து உண்ட 5 பேரை அம்மாநில வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.

இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த முயல் உள்ளிட்ட வனவிலங்கை பிடிக்க மர்ம நபர்கள் சிலர் பொறி வைத்துள்ளனர். அதில், 6 வயது மதிக்கத்தக்க சிறுத்தை ஒன்று அகப்பட்டுள்ளது. பொறியில் ஏதேனும் அகப்பட்டுள்ளதா..? என்பதை பார்க்கச் சென்றவர்கள், பொறியில் சிறுத்தை சிக்கியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர், வினோத் என்பவர் அதனை வீட்டிற்கு எடுத்துச் சென்று, தனது நண்பர்களுடன் அதனை கொன்று, இறைச்சியை சமைத்து சாப்பிட்டுள்ளனர். இது தொடர்பாக மங்குளம் சரக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், சிறுத்தையில் தோல், பற்கள் மற்றும் சமைக்கப்பட்ட இறைச்சி ஆகியவை சிக்கியது.

இதையடுத்து, பொறி வைத்து சிறுத்தையை பிடித்து சமைத்து சாப்பிட்ட, வினோத், குரியகோஸ், சிஎஸ் பினு, சாலி குஞ்சப்பன் மற்றும் வின்சென்ட் ஆகிய 5 பேரை வனப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பிருப்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Views: - 7

0

0