கேரளாவில் 3 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு

6 November 2020, 5:34 pm
vote1 - updatenews360
Quick Share

கேரளாவில் 3 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என அம்மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது முதல் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், கட்டுப்பாட்டு விதிகளுடன் தேர்தலை நடத்திக் கொள்ள மத்திய அரசு அறிவித்தது.

இந்த நிலையில், கேரளாவில் உள்ளாட்சி தேர்தலை நடத்த அம்மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. அதன்படி, அடுத்த மாதம் 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, டிச., 8-ந் தேதி முதல்கட்ட தேர்தலும், டிச., 10-ம் தேதி 2-ம் கட்ட தேர்தலும், டிச., 14-ம் தேதி 3-ம் கட்ட தேர்தலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 16ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 15

0

0