கேரளாவில் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 5 பேர் உயிரிழப்பு : 10 பேர் படுகாயம்!!

7 August 2020, 12:32 pm
kerala land slide - updatenews360
Quick Share

திருவனந்தபுரம் : கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வரும் நிலையில், நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக கேரளாவின், மலப்புரம், இடுக்கி, வயநாடு, உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில், மலைபிரதேசமான இடுக்கியின் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன.

இந்த சூழலில், இன்று காலை அங்குள்ள ராஜமலை பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில், 20-க்கும் மேற்பட்டோர் மண் சகதியில் சிக்கினர். இவர்களை பத்திரமாக மீட்ட தீயணைப்புப்படை வீரர்கள், அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் 5 பேர் உயிரிழந்த நிலையில் 10 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

கனமழையால் தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டு வரும் பகுதிகளில் ஹெலிக்காப்டர்கள் கொண்டு மீட்பு பணியை தொடர அதிகாரிகள் திட்டமிட்டனர். ஆனால் கடும் பனி மற்றும் மழை காரணமாக அந்த திட்டம் கைவிடப்பட்டது. இதனை தொடர்ந்து பேரிடர் மீட்புபடையினர் மற்றும் ராணுவத்தினர் உதவியை நாடியுள்ளது கேரள அரசு. மேலும், விபத்து ஏற்பட்ட வாய்ப்பு உள்ள பகுதிகளில் மருத்துவ குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கொரோனாவின் கோரதாண்டவத்தை எதிர்கொள்வதே போராட்டமாக உள்ள நிலையில், கேரளாவில் மழையும், பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

Views: - 12

0

0