சேலம் அரசு மருத்துவமனையில் பிரசவித்த கேரள சப்-கலெக்டர் : மக்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்த அரசு அதிகாரி!!

Author: Udayachandran RadhaKrishnan
19 August 2021, 4:20 pm
Dharmla Sri - Updatenews360
Quick Share

சேலம் : வாழப்பாடியை சேர்ந்த பெண் ஐஏஎஸ் அதிகாரி கேரளாவில் பணியாற்றி வரும் நிலையில் அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுத்துள்ளார்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த கரடிப்பட்டியை சேர்ந்தவர் ஐஏஎஸ் அதிகாரியான தர்மலா ஸ்ரீ. இவர் கேரள மாநிலம் ஆலப்புழாவில் சப்-கலெக்ட்ராக பணியாற்றி வருகிறார்.

இவரது கணவர் தாமரைக்கண்ணன் சென்னையில் மருத்துவராக உள்ளார். இந்த நிலையில் தர்மலா ஸ்ரீ கருவுற்ற நிலையில் மகப்பேறுக்காக விடுமுடிறை எடுத்து தனது சொந்த ஊரான கரடிப்பட்டியில் பெற்றோருடன் தங்கியிருந்தார்.

இந்த நிலையில் பிரசவ தேதி அருகில் வந்த நிலையில், தர்மலா ஸ்ரீயை தனியார் மருத்துவமனையில சேர பெற்றோர் மற்றும் உறவினர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஆனால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதை விரும்பாக சப்-கலெக்ட்ர் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் பிரசவத்திற்காக கடந்த 11ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

ஒரு மாவட்டத்தை ஆளக்கூடிய பதவியில் இருந்து கொண்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற விரும்பாத சப்கலெக்டர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சம்பவம் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 418

2

0